100வது சுதந்திர தினத்தின்போது.. வல்லரசு நாடாகியிருப்போம்.. பிரதமர் மோடி

Sep 03, 2023,02:59 PM IST

டெல்லி:  100வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும்போது நமது நாடு வளர்ந்த நாடாக, வல்லரசு நாடாக மாறியிருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


வல்லரசு இந்தியாவில் ஊழலுக்கும், ஜாதிக்கும், மதவாதத்திற்கும் இடம் இருக்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.


டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது:


2047ம் ஆண்டு வாக்கில் இந்தியா வளர்ந்த  நாடாக, வல்லரசு நாடாக மாறியிருக்கும். அந்த நாட்டில் ஜாதிகளுக்கும், மதவாதத்திற்கும், ஊழலுக்கும் இடம் இருக்காது. இவை இல்லாத தேசிய வாழ்வை நமது மக்கள் வாழ்வார்கள்.


உலகம் இன்று நமது தலைமையை எதிர்நோக்கி இருக்கிறது. நமது வழிகாட்டலை எதிர்நோக்கியுள்ளது. நமது கொள்கைகளும், நமது பார்வையும், எதிர்காலத்திற்கான பாதையாக உலக நாடுகள் பார்க்கின்றன.  ஜிடிபியை அடிப்படையாக கொண்டு மட்டுமே இதுவரை வளர்ச்சியைப் பார்த்து வந்த உலகம் இன்று மனித வாழ்க்கையின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பார்க்க ஆரம்பித்துள்ளன. இந்த மாபெரும் மாற்றத்துக்கு இந்தியா மிகச் சிறந்த வினையூக்கியாக செயல்பட்டுள்ளது.


கோடானு கோடி பசி நிறைந்த வயிறுகள் அடங்கிய நாடாக, உலகம் நம்மைப் பார்த்து வந்தது. அது இப்போது மாறி விட்டது. 200 கோடி திறமையான கைககளும், 100 கோடி திறமையான மனங்களும் அடங்கிய நாடாக நாம் மாறி நிற்கிறோம்.


அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு நம்மை உலகம் நினைவு கூறும் வகையிலான அடித்தளத்தை அமைக்கக் கூடிய அளவிலான திறமைகளுடன் நாம் இப்போது இருக்கிறோம். இந்தியாவை மிகப் பெரிய மார்க்கெட்டாக உலகம் முன்பு பார்த்தது. இப்போது உலக சவால்களுக்கு விடை அளிக்கக் கூடிய தீர்வாக இந்தியா மாறியுள்ளது.


குறுகிய  அரசியல் லாபத்திற்காக, இலவசங்கள் என்ற கலாச்சாரத்தைக் கொண்டு வந்து நாட்டை பெரும் நிதிச் சுமைக்கு முன்பு இருந்தவர்கள் ஆளாக்கி விட்டார்கள்.  தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட அவர்கள் மறந்து விட்டனர். மக்கள் மீது முன்பு இருந்த அரசுகளுக்கு நம்பிக்கை இல்லை. மக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறி விட்டனர் என்றார் பிரதமர் மோடி.


சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்