மெல்போர்ன்: மெல்போர்ன் நகரில் நடந்து வந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. கடைசி நாளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒற்றை ஆளாக கடுமையாக போராடினார். ஆனால் அவரது போராட்டம் பலன் தரவில்லை.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியிலும், ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வென்றிருந்தன. 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் மெல்போர்னில் 4வது போட்டி நடந்து வந்தது.
இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து தனது முதல் இன்னிங்ஸில் அதிரடியாக 474 ரன்களைக் குவித்து விட்டது. அதைத் தொடர்ந்து ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 369 ரன்களுக்கு இழந்தது. அதன் பின்னர் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்களி்ல் ஆட்டமிழந்தது.
இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பியது. குறிப்பாக முன்னணி வீரர்கள் சொதப்பித் தள்ளி விட்டனர். கேப்டன் ரோஹித் சர்மா சுத்தமாக பார்மிலேயே இல்லை. மீண்டும் சிங்கிள் டிஜிட்டில் அவர் ஆட்டமிழந்தார். அதேபோல கே.எல். ராகுல், விராட் கோலி ஆகியோரும் பொறுப்பின்றி அவுட்டானார்கள்.
இன்று கடைசி நாளில் இந்தியா தனது வீரப் போராட்டத்தில் குதித்தது. இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனி ஆளாக ரன் குவிக்கப் போராடினார். 84 ரன்களை எடுத்து ஆடிக் கொண்டிருந்தபோது சர்ச்சைக்கிடமான முறையில் அவர் அவுட்டாக்கப்பட்டார்.
நடுக்கள வீரர்கள் நிதீஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் பெரிய அளவில் ஸ்கோர் பண்ண முடியாததால் இறுதியில் இந்தியா 155 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம், ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.
ஆஸ்திரேலியா அணியில் நதான் லயான் 4 விக்கெட்களைச் சாய்த்தார். இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றால் இந்தத் தொடரை சமன் செய்ய முடியும். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியா வென்று விடும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெண்கள் உயர்ந்தால் தான் ஒரு சமூகம் உயர்ந்து நிற்க முடியும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
Khel Ratna Awards 2025.. டி. குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு
உட்கட்சிப் பிரச்சினை சரியாகி விட்டது.. இளைஞர் சங்கத் தலைவர் முகுந்தன் தான்.. டாக்டர் ராமதாஸ்
கலைஞர்களின் நிஜமான நினைவிடம் என்பது மண்ணில் இல்லை.. மனசில்.. கவிஞர் வைரமுத்து
அரசுப் பள்ளிகளில் தனியார்: அண்ணாமலை அறிக்கை.. அன்பில் மகேஷ் மறுப்பு.. தனியார் பள்ளிகளின் விளக்கம்!
தடையை மீறி போராட்டத்தில் குதித்த.. சௌமியா அன்புமணி உட்பட பாமக நிர்வாகிகள்.. கூண்டோடு கைது
Tirupati.. 2024ம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த.. 2.25 கோடி பக்தர்கள்!
ஊட்டியே சென்னையில் இறங்கியது போல்.. ஜில் ஜில் மலர்கள்.. ஜிகுபுகு ரயில்.. தொடங்கியது flower show!
மார்கழி 19 திருவெம்பாவை பாசுரம் 19 : உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
{{comments.comment}}