இந்தியாவுக்கு 3வது சாம்பியன்ஸ் டிராபி.. 6 பந்துகள் மிச்சம் வைத்து.. நியூசி.யை வீழ்த்தி அசத்தல்..!

Mar 09, 2025,10:05 PM IST

துபாய்: இந்தியா - நியூசிலாந்து இடையிலான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3வது சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது.  கடைசி நேரத்தில் ஒவ்வொரு ரன்னாக எடுத்து ரசிகர்களுக்கு பிபியை எகிற வைத்து விட்டனர் கே.எல். ராகுலும், ஜடேஜாவும்.


இந்தியா - நியூசிலாந்து இடையிலான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் இன்று நடைபெற்றது.. டாஸ் போடப்பட்டபோது நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் அதில் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு இந்திய பவுலர்கள் சரியான டப் கொடுத்தனர். குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்கள் விழந்து கொண்டே வந்தன. எதிர்பார்த்தது போல இந்திய ஸ்பின்னர்களின் சுழலில் சிக்கி நியூசிலாந்து கடுமையாக தடுமாறியது.




ரச்சின் ரவீந்திரா அதிரடியாக ஆடி தொடக்க நிலையில் ஸ்கோரை சற்று தூக்கிக் கொடுத்தார். அவர்  37 ரன்களை எடுத்தார். டேரில்  மிட்சல் 63, கிளன் பிலிப்ஸ் 34, மிட்சல் பிரேஸ்வெல் ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் எடுக்க 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களை எடுத்தது நியூசிலாந்து. ஒரு கட்டத்தில் அந்த அணி மிகவும் தடுமாறிய நிலையில் பிரேஸ்வெல் காட்டிய அதிரடியால் அந்த அணி கெளரவமான ஸ்கோரை எட்டியது.


இந்தியத் தரப்பில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா  2 விக்கெட்கள் வீழ்த்த, ஷமி, ஜடேஜா தலா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து இந்தியா தனது சேசிங்கைத் தொடங்கியது. எடுத்த எடுப்பிலேயே கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியைக் காட்டத் தொடங்கினார். 83 பந்துகளைச் சந்தித்த அவர் 7 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 76 ரன்களை விளாசினார். சுப்மன் கில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியாவுக்கு இன்றைய ஏமாற்றம் என்னவென்றால் அது விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்ததுதான். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை எட்ட முடியாமல் கோலி அவுட்டானதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.




இருப்பினும் மறுபக்கம் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி காட்டினார். 62 பந்துகளைச் சந்தித்த அவர் 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். கேப்டன் மிட்சல் சான்ட்னர் பந்தில் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார்.கடைசி நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தாலும் கூட கே.எல். ராகுலும், ஜடேஜாவும் இணைந்து வெற்றி இலக்கைத் தொட்டு அசத்தினர். இருப்பினும் கடைசி ஓவர்களில் ஒவ்வொரு ரன்னாக எடுத்து டென்ஷனாக்கி விட்டனர்.

இந்திய கேப்டன்களில் 2 ஐசிசி டைட்டில்களை வென்ற பெருமைக்குரியவர் தோனி மட்டுமே. இன்று இந்தியா வென்றதன் மூலம், அந்த சாதனையை நிகழ்த்தும் 2வது இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா உருவெடுத்தார்


சென்னை கடற்கரைகளில் போட்டி ஒளிபரப்பு


இன்றைய இறுதிப் போட்டியை சென்னையில் உள்ள ரசிகர்கள் காண வசதியாக மெரீனா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் பிரமாண்ட எல்இடி திரையில் காண தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்