மியான்மரிலிருந்து தப்பி ஓடி வரும் ராணுவ வீரர்கள்.. எல்லையில்.. வேலி போட இந்தியா முடிவு!

Jan 20, 2024,05:08 PM IST

டெல்லி: மியான்மரில் நடக்கும் உள்நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு ராணுவ வீரர்கள் பலர் அந்த நாட்டிலிருந்து தப்பி இந்தியாவுக்குள் ஊடுறுவி வருகிறார்கள். இதையடுத்து மியான்மர் எல்லைப் பகுதியில் வேலி போட இந்தியா முடிவு செய்துள்ளது.


மியான்மார் நாட்டில் இனக் கலவரம் தலைவிரித்தாடுகிறது. மியான்மரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி நடைபெறவில்லை. ராணுவ சர்வாதிகாரிகள்தான் ஆட்சியில் உள்ளனர். அவர்களுக்கும், புரட்சிப் படையினருக்கும் இடையே தொடர்ந்து பெரும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் பாதிக்கப்பட்டு பல ராணுவ வீரர்கள் தப்பி இந்தியாவுக்குள் ஓடி வருகின்றனர்.  கடந்த  3 மாதங்களில் மட்டும் 600க்கும் மேற்பட்ட மியான்மர் ராணுவத்தினர் இந்தியாவுக்குள் தப்பி வந்துள்ளனர்.


மிஸோரம் மாநிலத்தின் லவங்த்லாய் மாவட்டத்தில் அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களது முகாம்களை தாக்குதலில் ஈடுபட்டி வரும் அரக்கான் படை என்ற போராளிகள் குழு கைப்பற்றியதைத் தொடர்ந்து உயிர் தப்புவதற்காக இந்தியாவுக்குள் ஓடி வந்துள்ளனர் இந்த ராணுவத்தினர்.




கடந்த 2021ம் ஆண்டு மக்களாட்சியைக் கலைத்து விட்டு, ராணுவம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து மியான்மரில் பெரும் உள்நாட்டுக் கலவரம் வெடித்தது. 3 சிறுபான்மை இனக் குழுக்கள் ஒருங்கிணைந்து ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக தாக்குதலில் குதித்துள்ளனர். இந்தத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறுகிறது மியான்மர் ராணுவம்.


இந்த நிலையில் மியான்மரிலிருந்து பலர் இந்தியாவுக்குள் ஊடுறுவுவதைத் தடுக்கும் வகையில் எல்லைப் பகுதியில் வேலி போடவும், சுதந்திர நடமாட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் இந்தியா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், வங்கதேசத்துடன் உள்ளது போன்ற வேலியை மியான்மர் எல்லையிலும் அமைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.


சுதந்திர நடமாட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதால், இரு நாட்டு மக்களும் இனிமேல் எல்லை தாண்டிச் செல்ல விசா பெற வேண்டும். இந்தியா - மியான்மர் எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இடையே பாரம்பரிய உறவும், தொடர்பும் இருப்பதால், எல்லைப் பகுதியில் 70களில் சுதந்திர நடமாட்ட ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. தற்போது நிலைமை சரியாக இல்லாத காரணத்தால் அதை முடிவுக்குக் கொண்டு வருகிறது  மத்திய அரசு.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்