டெல்லி: உலக அளவில் சிறந்த சமையலைக் கொண்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
அட்லாஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் சூப்பரான சாப்பாட்டைக் கொண்டுள்ள நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது. 2வது இடம் கிரீஸ், 3வது இடத்தில் ஸ்பெயினும், நான்காவது இடத்தில் ஜப்பானும் உள்ளன.அட்லாஸ் சிறந்த சமையல் விருதுகள் 2022 ஐ அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 95 நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளனர். அதில்தான் இந்தியாவுக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.
சமையல் பொருட்கள், சாப்பாட்டு வகைகள், பானங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் அளித்த வாக்குகளை வைத்து இந்த தேர்வு நடத்தியுள்ளனர். இதில் 4.54 புள்ளிகளுடன் இந்தியா 5வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய சாப்பாட்டு வரிசையில், கரம் மசாலா, மலாய், நெய், கீமா, வெண்ணெய் பூண்டு நான் ஆகியவை பலரையும் கவர்ந்துள்ளனவாம். இந்தியாவைச் சேர்ந்த 460 வகை சாப்பாடுகளை அட்லாஸ் வகைப்படுத்தி, வரிசைப்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த காரவள்ளி ஹோட்டல், உலகின் சிறந்த ஹோட்டல்கள் வரிசையில் இடம் பிடித்து கூடுதல் பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளது.
டாப் 10 வரிசையில் இந்தியாவுக்குப் பின்னால்தான் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் எல்லாம் வருகின்றன.
உலகின் எந்த மூலைக்குப் போனாலும் காணப்படும் சீன வகை உணவுகளுக்கு இந்தப் பட்டியலில் 11வது இடமே கிடைத்திருப்பது ஆச்சரியமானது.
தெற்கு ஆசிய நாடுகளில் மொத்தம் 3 பேர்தான் டாப் 50 வரிசையில் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவைத் தவிர்த்துப் பார்த்தால் வங்கதேசம் 43வது இடத்திலும், பாகிஸ்தான் 47வது இடத்திலும் உள்ளன. எண்ணெய், நறுமணப் பொருட்களுக்குப் பெயர் போன இலங்கை டாப் 50 பட்டியலில் இடம் பெறதாது வியப்பானதே.
டாப் 50 பட்டியலில் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள்தான் அதிகம் இடம் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியல் பலத்த விவாதங்களையும் கிளப்பியுள்ளது. சாப்பாட்டுக்குப் பெயர் போன பல நாடுகள் டாப் 10 பட்டியலில் இடம் பெறவில்லை என பலர் புகார் கூறியுள்ளனர். குறிப்பாக மொராக்கோ, எத்தியோப்பியா,
மியான்மர் உள்ளிட்ட பல நாடுகளில் சாப்பாடு அருமையாக இருக்கும். ஆனால் இவை பட்டியலில் இடம் பெறாதது ஆச்சரியமே என்று ஒருவர் கூறியுள்ளார்.
இன்னொருவர், லெபனான், பாகிஸ்தான், தாய்லாந்து, ஜமைக்கா ஆகிய நாடுகள் டாப் 10 க்குள் இருக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து இந்தப் பட்டியலில் இவர்களுக்கு மேலே உள்ளது. பாகிஸ்தான் உணவை விடவா வங்கதேச உணவு சிறப்பு. இது பாரபட்சமானது என்று ஒருவர் கருத்திட்டுள்ளார்.
'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
{{comments.comment}}