டெல்லி: அனைவருக்கும் சுகாதார வசதி என்பதை நோக்கிய பயணத்தில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் கடந்துள்ளது - 1,50,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களை அமைத்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதை வெளிப்படுத்தும் குறிப்பிடத்தக்க சாதனையில், இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைத் தாண்டியுள்ளது- 150,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் செயல்படுத்தப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பே இந்த சாதனையை நிறைவேற்றிய தேசத்தின் முயற்சிகளைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார், மேலும் இந்த மையங்கள் நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் ஆரம்ப சுகாதார வசதிகளை எளிதாக அணுகவும் பெறவும் உதவும் என்று அவர் கூறினார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, தேசத்தின் இந்த சாதனைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியா தான் நினைத்த இலக்கை வெற்றிகரமாக அடைந்துவிட்டதற்காகத் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த மற்றும் கூட்டு முயற்சிகள், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை யதார்த்தமாக்கி, உறுதி செய்யப்பட்ட, விரிவான ஆரம்ப சுகாதார சேவைகளுக்கான உலகளாவிய மாதிரியாக இந்தியாவை உருவாக்கியுள்ளது.
நாடு முழுவதும் 134 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களால் பயனடைந்துள்ளனர். மேலும் 86.90 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் தொற்றாத நோய்களுக்காக ஒட்டுமொத்தமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 29.95 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்திற்கும், 25.56 கோடி நீரிழிவு நோய்க்கும், 17.44 கோடி பேர் புற்றுநோய்க்கும், 17.44 கோடி பேர் மார்பகப் புற்றுநோய்க்கும், 5.66 கோடி பேர் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய்க்கும் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
இதுநாள்வரை, இந்த மையங்களில் 1.60 கோடிக்கும் அதிகமான நல்வாழ்வு அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும், 15,000 முதல் 20,000 மக்கள்தொகையை உள்ளடக்கிய நகர்ப்புறத்தில் 2-3 மையங்களை நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம்-சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையம் என்ற குடையின் கீழ் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் செயல்படுத்தி, புறநோயாளி பராமரிப்பை வலுப்படுத்துகிறது
Most Expensive player in IPL history.. டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. வாங்கியது சென்னைஅணி!
A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!
IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?
அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
{{comments.comment}}