India Vs Pakistan.. விராட் கோலி சுப்ரீம் செஞ்சுரி.. கடைசி பந்தில் பவுண்டரி.. பாக் தூள் தூள்!

Feb 23, 2025,08:34 PM IST

துபாய்: கேப்டன் ரோஹித் சர்மா, அதிரடி வீரர் சுப்மன் கில் விக்கெட்களை இந்தியா இழந்தாலும் கூட விராட் கோலியும், ஸ்ரேயாஸ் ஐயரும் இணைந்து அபார ஆட்டம் ஆடி, பாகிஸ்தானை இந்தியா வெல்ல உதவினர். 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வென்றது இந்தியா.


விராட் கோலி போட்ட செம ஸ்டைலிஷான செஞ்சுரிதான் இன்றைய வெற்றியில் அடங்கிய இரட்டை சந்தோஷம். கடைசி பந்தில் பவுண்டரி அடித்து தனது சதத்தை எட்டியதோடு, இந்தியாவையும் வெற்றி பெற வைத்தார் கிங் கோலி.




இந்தியா பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டி துபாயில் விறுவிறுப்பாக நடந்தது. கிட்டத்தட்ட ஒன்சைட் மேட்ச் போல இது மாறி விட்டது. முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான், இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியமால், 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஒரு கட்டத்தில் மிக மோசமான நிலையில் பாகிஸ்தான் இருந்தது. இருப்பினும் சாத் ஷகீலும், முகம்மது ரிஸ்வானும் இணைநது 104 ரன் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை கெளரவமான நிலைக்குக் கொண்டு சென்றனர்.


ஷகீல் 62 ரன்களும், கேப்டன் ரிஸ்வான் 46 ரன்களும் எடுத்தனர். அவர்கள் அவுட்டான பிறகு அடுத்தடுத்து பாகிஸ்தான் விக்கெட்கள் சரிந்து 250 ரன்களைக் கூட தொட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. 




இந்திய அணியில் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி 40 ரன்கள் கொடுத்து  3 விக்கெட்களை சாய்த்தார். ஹர்டிக்  பாண்ட்யாவுக்கு 2 விக்கெட்கள் கிடைத்தன. ரவீந்திர ஜடேஜா, அக்ஸார் படேல், ஹர்ஷித் ராணா ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.


இதையடுத்து இந்தியா தனது சேசிங்கைத் தொடங்கியது.  கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடத் த தொடங்கிய நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் 20 ரன்களில் வீழ்ந்தார். இந்த ரன்களில் 3 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடக்கம். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சதம் அடித்த சுப்மன் கில் இன்றைய போட்டியில் சற்றே தடுமாறி 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.  இரு முக்கிய வீரர்களும் ஆட்டமிழந்தாலும் கூட இந்தியாவின் சேசிங் பிரச்சினை இல்லாமல் போனது.


விராட் கோலி - ஸ்ரேயாஸ் அசத்தல்




இந்திய அணியின் ஸ்டார் வீரர் விராட் கோலி இன்றைய போட்டியில் புதிய மைல்கல்லை எட்டினார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் 14,000 ரன்களைத் தொட்டு தனது சாதனைப் பட்டியலை மேலும் மெருகேற்றிக் கொண்டார்.  விராட் கோலி மிக மிக அழகான அரை சதத்தையும் இன்று அடித்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார் என்பது கூடுதல் மகிழ்ச்சிச் செய்தியாகும்.  ஸ்ரேயாஸ் அவுட்டான பிறகு அடுத்து வந்தவர்கள் சற்று சொதப்பியதால் கோலியால் சதம் அடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.


ஆனால் நான் யாருடா கிங் கோலிடா என்று சொல்வது போல கடைசிப் பந்தை பவுண்டரிக்கு விளாசி சதம் போட்டு கலக்கி விட்டார் விராட் கோலி. இன்றைய வெற்றியை மிக மிக ஸ்பெஷலான ஒன்றாக மாற்றி விட்டார் கோலி. விராட் கோலிக்குப் பக்க பலமாக ஸ்ரேயஸ்  ஐயர் விளையாடினார். ஸ்ரேயாஸ்  ஐயர் 56 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்தார்.  கோலியும், ஸ்ரேயாஸும் சூப்பரான பார்ட்னர்ஷிப் கொடுத்தது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது


ஹர்டிக் பாண்ட்யா அதிரடியாக 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலியும், அக்ஸார் படேலும் இணைந்து  மேலும் விக்கெட் விழாமல் தடுத்து அணியை வெற்றி இலக்கை எட்ட வைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்