நிதி ஆயோக் மாநாடு.. இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணிப்பு.. புதுச்சேரி ரங்கசாமியும் ஆப்சென்ட்!

Jul 27, 2024,12:29 PM IST

டெல்லி:   டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் மாநாடு இன்று நடைபெற்றது.  பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், கொள்கைகள் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.


திட்டக் கமிஷன் என்று முன்பு இருந்ததுதான் கலைக்கப்பட்டு நிதி ஆயோக் என்ற அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர்தான் தலைவராக இருக்கிறார். அதில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், முக்கிய அமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான திட்டங்கள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. 




இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்று முதலில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களான டெல்லி, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஜார்க்கண்ட், கர்நாடகா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களும் மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.


அதேசமயம், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் கூட்டத்துக்கு வரவில்லை. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் ரங்கசாமிக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்துள்ள ரங்கசாமி, நிதி ஆயோக் மாநாட்டுக்குப் போகவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. புதுச்சேரி அரசுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டதால், தான் போகத் தேவையில்லை என்று கருதி ரங்கசாமி போகவில்லை என்று சொல்கிறார்கள்.


முதலில் இந்த மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த மேற்கு வங்காள மாநில முதல்வர் மமதா பானர்ஜி பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டார். இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அதேபோல மற்ற மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.


மமதா பானர்ஜி வெளிநடப்பு


இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட மமதா பானர்ஜி போன வேகத்தில் வெளிநடப்பு செய்து விட்டு வெளியேறி விட்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டத்தைப் புறக்கணித்து விட்ட நிலையில் நான் மட்டுமே பங்கேற்றேன். ஆனால் என்னை 5 நிமிடம் கூட பேச விடவில்லை. மத்திய அரசு பாரபட்சத்துடன் நடக்கிறது. இதைக் கண்டித்து நான் வெளிநடப்பு செய்தேன் என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுக்கு மேலும் 2 மகன்கள் உள்ளனராம்.. யார் மூலமா தெரியுமா?.. பரபர தகவல்!

news

ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பினார் மகாவிஷ்ணு.. சைதாப்பேட்டை போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை!

news

ஸ்டிரைக் அறிவிப்பை மறு பரிசீலனை பண்ணுங்க.. தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை

news

சின்னத்திரையில் பாலியல் அத்துமீறல்கள் கிடையாது.. எல்லாமே மியூச்சுவல்தான்.. நடிகையின் ஸ்டேட்மென்ட்!

news

28வது வருட திரையுலக வாழ்க்கையில் சிம்ரன்.. தி லாஸ்ட் ஒன்.. நாயகியாக மீண்டும் ரீ என்ட்ரி!

news

விதம் விதமான விநாயகர்கள்.. தமிழ்நாடு முழுவதும் 35,000 சிலைகள்.. விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

news

விளையாட்டுக் களத்திலிருந்து.. அனல் பறக்கும்.. தேர்தல் களத்திற்கு என்ட்ரி கொடுக்கும் வினேஷ் போகத்!

news

செப்டம்பர் 07 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

ரிஷப ராசிக்காரர்களே... திறமை வெளிப்படும் காலமிது

அதிகம் பார்க்கும் செய்திகள்