விசாகப்பட்டனம்: 2வது டெஸ்ட் போட்டியில், ஜஸ்ப்ரீத் பும்ரா, அஸ்வின் உள்ளிட்டோரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து அணியை 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலா முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி கைப்பற்றிய நிலையில் விசாகப்பட்டனத்தில் 2வது டெஸ்ட் போட்டி நடந்தது.
இதில் முதலில் பேட் செய்த இந்தியா 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி 209 ரன்கலைக் குவித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 253 ரன்களுக்கே சுருண்டு போய் விட்டது. இந்தியாவின் பும்ரா 6 விக்கெட்களை அள்ள, குல்தீப் 3 விக்கெட்களைச் சாய்த்தார்.
இந்தியா தனது 2வது இன்னிங்ஸை, 225 ரன்களில் இழக்க, பெரிய வெற்றி இலக்குடன் இங்கிலாந்து தனது சேசிங்கைத் தொடங்கியது. ஆனால் இந்த முறையும் பும்ரா ரூபத்தில் புயல் வீசவே இங்கிலாந்து தடுமாறிப் போய் விட்டது. கூடவே அஸ்வின் சுழலும் இன்னொரு பக்கம் தாக்க முற்றிலும் தகர்ந்து போய் 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்றுப் போனது.
பும்ரா 3 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் சாய்த்தனர். இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 9 விக்கெட்களை அள்ளி எடுத்தார் பும்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
பும்ரா ஒரு பக்கம் வேகப்பந்து வீச்சில் அதிரடி காட்ட, அஸ்வின் மறுபக்கம் சுழற்பந்து வீச்சில் புயலைக் கிளப்பு பிரமாதமான மேட்ச்சாக இது அமைந்து விட்டது. இந்த வெற்றியின் மூலமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது இந்தியா. இரு அணிகளும் இன்னும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம்... டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
அதிமுக கூட்டணி அறிவிப்பு.. முதல்வர் மனதில் இடிபோல இறங்கியுள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி
தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருப்பதால்.. கூட்டணி குறித்து யோசித்து முடிவு எடுப்போம்.. பிரேமலதா
பாஜக திமுக மறைமுக கூட்டணி அம்பலமாகிவிட்டது.. தவெக தலைவர் விஜய்
கோவையில் மண்டலவாரியாக 5 இடங்களில் பூத் கமிட்டி மாநாடு... தவெக திட்டம்!
அதிமுக- பாஜக கூட்டணி.. தோல்வி கூட்டணி.. முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் விமர்சனம்!
பெளர்ணமியிலும் சிறந்த.. பிங்க் மூன்.. இன்று இரவு காணத் தவறாதீர்கள்!
2026ல் சட்டமன்ற தேர்தல்.. நாலே கூட்டணிதான்.. விறுவிறுப்பாகும் கூட்டணிகள்.. பரபரக்கும் அரசியல் களம்!
பொன்முடி பேச்சு.. ஏப்., 16ம் தேதி அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி!