சுப்மன் கில், ஜுரல் சூப்பர்ப் ஆட்டம்.. 5 விக்கெட் வித்தியாசத்தில்.. இங்கிலாந்து வீழ்த்தியது இந்தியா

Feb 26, 2024,05:13 PM IST

ராஞ்சி:  இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமான வெற்றியை பெற்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது. 


இரு அணிகளுக்கும் இடையே ராஞ்சியில் நடைபெற்று வந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. சுப்மன் கில் மற்றும் ஜுரல் ஆகியோர் இணைந்து சிறப்பாக ஆடி இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.


இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்று விட்டது. முன்னதாக 192 என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய இந்தியாவுக்கு ரோஹித் சர்மாவும், ஜெய்ஸ்வாலும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர்.




கேப்டன்  ரோஹித் சர்மா 55 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்தார். இருப்பினும் இந்தியாவின் புதிய சூப்பர் ஸ்டார்களான துருவ் ஜூரல் மற்றும் கில் ஆகியோர் அபாரமாக ஆடி அணியை வெற்றிக் கோட்டைத் தொட வைத்தனர். இருவரும் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தனர். சுப்மன் கில் 52 ரன்களும், ஜுரல்  39 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சோயப் பாசிர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் குவித்திருந்தது. இந்தியா பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆனால் இங்கிலாந்தின் 2வது இன்னிங்ஸில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் புயலாக மாறி பந்து வீசவே அந்த அணி 15 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியாவுக்கு சேசிங் ஈஸியானது. இந்தியா தனது சேசிங்கை 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றிகரமாக முடித்தது.


துருவ் ஜூரல் மேன் ஆப் தி மேட்ச்




ராஞ்சி டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருது இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரலுக்குக் கிடைத்துள்ளது. இது அவருக்கு 2வது டெஸ்ட் போட்டியாகும். இதில் முதல் இன்னிங்ஸில் 90 ரன்களைக் குவித்திருந்தார் ஜூரல். 2வது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 39 ரன்களை எடுத்திருந்தார். 


தனது 2வது டெஸ்ட் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற ஜூரலுக்கு வாழ்த்துகள் குவிந்து கொண்டுள்ளன. அடுத்த எம்.எஸ். தோனி இவர்தான் என்று ஏற்கனவே சுனில் கவாஸ்கரும் புகழாரம் சூட்டியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்