முதல் டெஸ்ட்: வச்சு செஞ்ச அஸ்வின்.. 280 ரன்கள் வித்தியாசத்தில்.. வங்கதேச அணிக்கு படு தோல்வி!

Sep 22, 2024,12:16 PM IST

சென்னை:  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை சுருட்டிப் போட்டு வெற்றி பெற்றுள்ளது இந்தியா.


இந்தியா  - வங்கதேச அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில்  முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின் அதி அற்புதமாக ஆடி சதம் (113)  போட்டார். ரவீந்திர ஜடேஜா 83 ரன்களைக் குவித்தார். வங்கதேச அணியின் பந்து வீச்சாளர் ஹசன் மகமுத் 5 விக்கெட்களை சாய்த்தார்.




இதையடுத்து வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடியது.  இதில் அஸ்வினின் சிறப்பான பந்து வீச்சின் காரணமாக வங்கதேச அணி 149 ரன்களில் சுருண்டது. அஸ்வின் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.  இதைத் தொடர்ந்து இந்தியா தனது 2வது இன்னிங்ஸை ஆடியது. முதல் இன்னிங்ஸில் அஸ்வின் சதம் அடித்தது போல இந்த இன்னிங்ஸில் சுப்மன் கில் (119), ரிஷப் பந்த் (109) ஆகியோர் சதம் விளாச இந்தியா 4 விக்கெட்களுக்கு 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.


பின்னர் ஆடிய வங்கதேச அணி இன்று 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 280 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அஸ்வின் இந்த முறையும் ஸ்டிரைக் செய்தார். அபாரமாக பந்து வீசிய அவர் 5 விக்கெட்களைச் சாய்த்து வங்கதேசத்தை நிலைகுலைய வைத்து விட்டார். பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். சென்னை மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதை இந்த டெஸ்ட் போட்டியிலும் இந்தியா நிரூபித்தது.




சென்னை டெஸ்ட் போட்டியில் அஸ்வின்தான் நாயகனாக ஜொலித்தார். இது அவருக்கு 37வது ஐந்து விக்கெட் சாதனையாகும். சென்னை டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் அஸ்வினுக்கே கிடைத்தது.


அடுத்து செப்டம்பர் 27ம் தேதி கான்பூரில் 2வது மற்றும் டெஸ்ட் போட்டி நடைபெறும்.  இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 போட்டித் தொடர் தொடங்கும். முதல் போட்டி அக்டோபர் 6ம் தேதி குவாலியரில் நடைபெறும். அக்டோபர் 9ம் தேதி 2வது போட்டி  டெல்லியில் நடைபெறும். 3வது போட்டி அக்டோபர் 12ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும். 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்