டெல்லி: இந்தியா கூட்டணிக்கு லோக்சபா தேர்தலில் கிளியர் மெஜாரிட்டி கிடைக்கும். அதாவது பெரும்பான்மைக்கும் கூடுதலான இடங்களை நாங்கள் பெறுவோம். 48 மணி நேரத்தில் பிரதமரை தேர்வு செய்வோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது. ஜூன் 1ம் தேதி இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அந்தத் தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்றோடு முடிவடைகிறது. அதாவது நடப்பு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றோடு ஓய்கிறது. 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 57 தொகுதிகளில் இறுதிக் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 904 வேட்பாளர்கள் இதில் களம் காண்கின்றனர்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்காளம் 9, பீகார் 8, ஒடிஷா 6, இமாச்சல் பிரதேசம் 4, ஜார்க்கண்ட் 3, சண்டிகர் 1 ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும். அன்று நள்ளிரவுக்கு மேல் ஒரு டிரெண்ட் உறுதியாகி விடும். எனவே அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்பது குறித்த தெளிவும் அன்று இரவே கிடைத்து விடும்.
இந்தப் பின்னணியில் தேர்தல் முடிவைத் தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கியக் கட்சிகள் தீவிரமாக ஆலோசிக்கத் தொடங்கி விட்டன. இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 1ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரிக்கு வருகிறார். அங்கு விவேகானந்தர் நினைவு பாறையில் உள்ள மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்யயப் போகிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது அடுத்த பிரதமரை முடிவு வெளியான 48 மணி நேரத்தில் இந்தியா கூட்டணி தேர்வு செய்யும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு உறுதியான தீர்ப்பை மக்கள் அளிப்பார்கள். நாங்கள் தெளிவான மெஜாரிட்டியைப் பெறுவோம். மெஜாரிட்டி என்பது 272 இடங்கள். நாங்கள் தெளிவான மெஜாரிட்டியைப் பெறுவோம் என்றால் 273 தொகுதிகளுக்கும் மேலாக பெறுவோம். தேரத்ல் முடிவுகள் வெளியான 48 மணி நேரத்தில் எங்களது பிரதமரையும் கூட நாங்கள் தேர்வு செய்து விடுவோம்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பல கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. அவர்களை சேர்க்கலாமா வேண்டாமா என்பது குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும். குறிப்பாக பல்டி மாஸ்டர் நிதீஷ் குமார், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை சேர்க்கலாமா வேண்டாமா என்பது குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும்.
ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்காகத்தான் குமரி முனையில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்யப் போகிறார். இதே குமரி முனையில்தான் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார். அவரது பயணம் டெல்லியில் வெற்றியில் முடிகிறது. பிரதமரின் பயணம், டெல்லியிலிருந்து குமரி முனையில் தியானத்தில் முடியப் போகிறது.
காங்கிரஸ் கட்சி இந்த முறை சிறப்பாக செயல்பட்டுள்ளது. நல்ல முடிவை எதிர்நோக்கியிருக்கிறோம். குறிப்பாக ராஜஸ்தான், கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிராவில் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும். சட்டிஸ்கர், அஸ்ஸாம், மத்தியப் பிரதேசத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவோம். உத்தரப் பிரதேசத்திலும் எங்களுக்கு இந்த முறை நல்ல லாபம் கிடைக்கும். பாஜகவின் பிடி அங்கு தளறும்.
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
{{comments.comment}}