டெல்லியை குலுங்க வைக்கத் தயாராகும் இந்தியா கூட்டணி.. இன்று பிரமாண்டப் போராட்டம்!

Mar 31, 2024,12:45 PM IST

டெல்லி: டெல்லியை குலுங்க வைக்கும் வகையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற பெயரில் இன்று ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. 


டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. கடந்த வாரம் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்திய வரலாற்றிலேயே முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில் கெஜ்ரிவாலுக்காக இந்தியா கூட்டணிக் கட்சிகள் களத்தில் குதித்துள்ளன. மேலும் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டெல்லியில் வைத்து தங்களது பலத்தை பறை சாற்றவும் இந்த விஷயத்தைக் கையில் எடுத்துள்ளது இந்தியா கூட்டணி. அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவற்றை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கியது, பல்வேறு கட்சிகளுக்கு வருமான வரித்துறை மூலம் அபராதம் போட வைப்பது உள்ளிட்டவற்றைக் கண்டித்தும், கெஜ்ரிவால் கைதைக் கண்டித்தும் இன்றைய போராட்டம் நடைபெறவுள்ளது.




இன்றைய போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத சரத் சந்திர பவார் கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, திமுக சார்பில் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.


இந்தியா கூட்டணியை உதறி விட்டு, மேற்கு வங்காளத்தில் தனித்துப் போட்டியிடும் திரினமூல் காங்கிரஸும் தனது பிரதிநிதியை போராட்டத்திற்கு அனுப்பி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மறுபக்கம் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அதன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். கெஜ்ரிவாலைப் போலவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரனும் பங்கேற்பார் என்று தெரிகிறது. அவர் நேற்று சுனிதா கெஜ்ரிவாலைச் சந்தித்து கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார் என்பது நினைவிருக்கலாம்.


இந்தப் போராட்டத்தை மிகப் பெரிய அளவில் நடத்துவதன் மூலம் வட மாநிலங்களை ஆச்சரியப்படுத்த இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளதாம். போராட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,  இது தனிப்பட்ட யாருக்காகவும்  நடத்தப்படும் கூட்டம் அல்ல.. மாறாக ஜனநாயகத்தைக் காக்கக் கோரி நடத்தப்படவுள்ள போராட்டம். மொத்த நாட்டுக்கானது. மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு நேரம் முடியப் போகிறது. இந்தியா கூட்டணி அதை இன்று உரத்த குரலில் நாட்டுக்குத் தெரிவிக்கும் என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்