எக்சிட் போல்களை செட்டப் செய்து விட்டது பாஜக.. மக்களே நம்பாதீர்கள்.. இந்தியா கூட்டணி கோரிக்கை!

Jun 01, 2024,10:31 AM IST

டெல்லி:  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் இன்றோடு முடிவடைகிறது. இன்று வாக்குப் பதிவு முடிவடைந்ததும் எக்சிட் போல்கள் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சி நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இது வழக்கமாக ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் வெளியாகும் செய்திகள்தான். ஆனால் இந்த முறை இந்த எக்சிட் போல்களை நம்பாதீர்கள் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் அழுத்தம் திருத்தமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.


நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டது. இன்று ஏழாவது கட்ட வாக்குப் பதிவு நடந்து வருகிறது. தேர்தல் முடிந்ததும் எக்சிட் போல்கள் வெளியாகும். 7 கட்டமாக நடந்த வாக்குப் பதிவின்போது வாக்களித்து விட்டு வெளியே வந்த வாக்காளர்களிடம் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டு அதன் அடிப்படையில் முடிவுகளை கணிப்பதுதான் இந்த எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பாகும்.


இது ஒவ்வொரு தேர்தல் முடிவிலும் வெளியாகும் ஒன்றுதான். பெரும்பாலான கட்சிகள் எக்சிட் போல் முடிவுகளை ஏற்பதில்லை. இது ஊகக் கணிப்பு என்பதாலும், இதற்கு நேர்மாறாக பலமுறை தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என்பதாலும், பெரும்பாலான கட்சிகள் இதைக்  கண்டுகொள்வதில்லை. ஆனால் மக்களுக்கு இது சுவாரஸ்யத்தைக் கொடுக்கும் செய்தியாக இருக்கும். யாருக்கு எத்தனை சீட் கிடைக்கும், யாரெல்லாம் வெல்லப் போகிறார்கள், யாருடைய ஆட்சி அடுத்து அமையும் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் மக்களிடையே நிலவுவதால் அவர்கள் இதை ஆவலோடு கவனிப்பது வழக்கம்.



நடப்பு லோக்சபா தேர்தல் முடிவில் யார் ஆட்சியமைக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சி முடியப் போவதாக இந்தியா கூட்டணி கூறி வருகிறது. நாங்களே மூன்றாவது முறையும் ஆட்சியமைப்போம், மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் என்று பாஜக கூறி வருகிறது. இந்த நிலையில் இன்று மாலைக்கு மேல் ஒளிபரப்பாகவுள்ள எக்சிட் போல் முடிவுகள் மக்களிடையே பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில்தான் எக்சிட் போல் முடிவுகள் பெரும்பாலும் பாஜகவுக்கு ஆதரவாக வருவது போல பாஜக ஆதரவு மீடியாக்கள் செட்டப் செய்துள்ளதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் கூறி வருகின்றனர். நேற்று தனது கட்சியினருக்கு இதுதொடர்பாக வேண்டுகோள் விடுத்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விடுத்த வேண்டுகோளில், எக்சிட் போல்களை பாஜகவுக்கு ஆதரவாக இருப்பது போல பாஜக ஆதரவு ஊடகங்கள் திட்டமிட்டுள்ளன. இன்று மாலை முதலே பாஜகதான் மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதாக அவர்கள் முழங்கப் போகிறார்கள். கொண்டாட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளனர். இது மக்களை திசை திருப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும் எதிர்க்கட்சியினரின் மன உறுதியை குலைக்கும் திட்டம் இது. இப்படி செய்து விட்டு வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேட்டில் ஈடுபடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே எக்சிட் போல் முடிவுகளை கண்டுகொள்ளாதீர்கள். உண்மையான முடிவு ஜூன் 4ம் தேதிதான் தெரியும். அந்த முடிவு தெரியும் வரை எதையும் நம்பாதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார் அகிலேஷ் யாதவ்.


பிரதமர் மோடியின் வாரணாசி உள்பட.. 57 தொகுதிகளில்.. விறுவிறுப்பான இறுதிக் கட்ட வாக்குப் பதிவு!


அகிலேஷ் யாதவ் மட்டுமல்லாமல் பல்வேறு இந்தியா கூட்டணி தலைவர்களும் இதேபோல கோரிக்கை வைத்து வருகின்றனர். பொதுமக்களும் எக்சிட் போல் முடிவுகளை முழுமையாக நம்ப வேண்டாம் என்றும் குறிப்பாக பாஜகதான் ஆட்சியமைக்கும், பாஜகவுக்கு 300 சீட்டுக்கு  மேல் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லத் திட்டமிட்டுள்ளனர். இதை நம்பாதீர்கள் என்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


விவாதங்களில் பங்கேற்க மாட்டோம்- காங்கிரஸ்


காங்கிரஸ் கட்சியின் பவன் கெரா இதுகுறித்து கூறுகையில், எக்சிட் போல் முடிவுகளை பாஜகவுக்கு ஆதரவாக  காட்ட திட்டமிட்டுள்ளனர். இதை நாங்கள் ஆதரிக்க முடியாது. இதுதொடர்பான விவாதங்களிலும் காங்கிரஸ் பங்கேற்காது. தேர்தல் முடிவுகளை செட்டப் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். கடைசிக் கட்ட தேர்தலில் தகுதி உள்ள அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். இவர்களது திட்டங்களை தவிடுபொடியாக்க வேண்டும்.


தேர்தல் முடிந்து விட்ட பிறகு ஊகங்களை வைத்து எதையும் சாதிக்க முடியாது.  ஜூன் 4ம் தேதி வெளியாவதுதான் உண்மையான தேர்தல் முடிவு. அதற்கு முன்பு வெளியிடப்படும் அனைத்து ஊகங்களும் கற்பனையே, எதற்கும் பயன் இல்லாதவையே என்று கூறியுள்ளார் பவன் கெரா.


அமித்ஷா கிண்டல்:




எதிர்க்கட்சியினரின் இந்த கோரிக்கையை பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா கிண்டலடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குழந்தை போல எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன.  இதுகுறித்து அவர் கூறுகையில், மிகப் பெரிய தோல்வியை தாங்கள் சந்திக்கப் போவதை உணர்ந்து விட்டது காங்கிரஸ். எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்களை அது சந்திக்கப் போகிறது என்று தெரியவில்லை. எனவேதான் எக்சிட் போல் முடிவுகளை எதிர்கொள்வதிலிருந்து அது தப்பித்து ஓடுகிறது.


தயவு செய்து எக்சிட் போல் முடிவுகளை தைரியமாக சந்தியுங்கள். அதிலிருந்து தப்பி ஓட நினைக்காதீர்கள். தோல்வியை எதிர்கொள்ளத் தயாராகுங்கள். உங்களைத் திருத்திக் கொள்ள முயலுங்கள் என்று கூறியுள்ளார் அமித்ஷா.

சமீபத்திய செய்திகள்

news

ரகசியமாக நடந்த சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்...வாழ்த்து மழையில் நனைந்த தம்பதிகள்..!

news

கூட்டணி தொடருமா?...முதல்வருடன் பேசியது என்ன?...திருமாவளவன் அளித்த பளிச் பதில்

news

மறுபடியும் வந்துட்டோம்...புதிய பட அறிவிப்பை வெளியிட்டார் லெஜண்ட் சரவணன்

news

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு...கைதானவர் சிறையில் தற்கொலை

news

வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு...ரசிகர்கள் கொண்டாட்டம்..!

news

கெஜ்ரிவால் ராஜினாமா செய்தால் டில்லியின் அடுத்த முதல்வர் யார்?

news

மதுவிலக்கால் கூட்டணியில் பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார்...திருமாவளவன் அதிரடி

news

அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம்... சவரன் ரூ.55,000ஐ தாண்டியது

news

அக்டோபர் 3வது வாரத்தில் விஜய் கட்சி மாநாடு? அனுமதி கேட்டு மீண்டும் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்