மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியின் டீல் ஓகே.. காங்.18, உத்தவ் தாக்கரே 20, சரத் பவார்10!

Mar 01, 2024,07:28 PM IST

மும்பை: மகாராஷ்டிராவில் தனது தொகுதிப் பங்கீட்டை இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது. அதன்படி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


இந்தியா கூட்டணி அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் தனது தொகுதிப் பங்கீட்டை முடித்து வருகிறது. உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவிலும் முடிவுக்கு வந்துள்ளது.




மகா விகாஸ் அகாதி கூட்டணி என்ற பெயரில் மகாராஷ்டிராவில் இயங்கும் இந்தியா கூட்டணி அங்குள்ள 48 தொகுதிகளையும் பிரச்சினை இல்லாமல் பிரித்துக் கொண்டுள்ளது.  விரைவில் இந்தத் தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தக் கூட்டணியில் உத்தவ் தாக்கரே கட்சி தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளிலிருந்து  இரண்டு தொகுதிகளை வஞ்சித் பகுஜன் அகாதி என்ற கட்சிக்கு ஒதுக்கும். அதேபோல ராஜு ஷெட்டி என்ற சுயேச்சைக்கு தனது தொகுதியில் ஒன்றை சரத் பவார் கட்சி கொடுக்கவுள்ளது.


மும்பையில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் உத்தவ் தாக்கரே கட்சி நான்கு இடங்களில் போட்டியிடும்.  அதில் மும்பை வட கிழக்கு தொகுதியில் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சி போட்டியிடும்.


கடந்த 2019 தேர்தலிலின்போது பாஜக சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தன. அப்போது சிவசேனா கட்சி உடைக்கப்படவில்லை. அதில் சிவசேனா கட்சி 23 தொகுதிகளில் போட்டியிட்டு 18ல் வென்றது.  காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் வென்றது. உடைக்கப்படாத தேசியவாத காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டு நான்கில் வெற்றி பெற்றிருந்தது.


இப்போது சிவேசனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டுமே உடைக்கப்பட்டு விட்டன. அதிலிருந்து பிரிந்து போன ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்தான் ஒரிஜினல் கட்சிகள் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருவருமே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். ஷிண்டே முதல்ராகவும், அஜீத் பவார் துணை முதல்வராகவும் இருக்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்