அகமதாபாத்: உலகக் கோப்பைத் தொடர்களில் இதுவரை 8 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று அசைக்க முடியாத சாதனையுடன் வலுவாக உள்ள ஆஸ்திரேலியா தனது 6வது கோப்பையை வென்று கிரிக்கெட் உலகில் தான் ஒரு வல்லரசு என்பதை நிரூபித்துள்ளது.
கிரிக்கெட்டில் கில்லாடி அணிகள் பல உள்ளன. ஆனால் வல்லரசு அணிகள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு வெகு சிலரே உள்ளனர். அதையும் கூட குறுக்கினால், ஒரே ஒரு அணியை மட்டுமே சொல்ல முடியும். அதுதான் ஆஸ்திரேலியா.
முதல் உலககக் கோப்பை கிரிக்கெட் தொடர் முதல் நடப்பு தொடர் வரை அந்த அணியின் ஆதிக்கம் மிகப் பெரியது. முதல் உலகக் கோப்பைப் போட்டியிலேயே ஆஸ்திரேலியா அணி மயிரிழையில்தான் கோப்பையை நழுவ விட்டது. ஜஸ்ட் 17 ரன்கள் வித்தியாசத்தில்தான் மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வியைத் தழுவி முதல் கோப்பையை நழுவ விட்டது.
ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தைப் போல வேறு எந்த உலக அணியும் கிரிக்கெட்டில் செலுத்தியதில்லை. கேப்டன்கள் மாறலாம், வீரர்கள் போகலாம்.. ஆனால் ஆஸ்திரேலியாவின் வலிமை தொடர் கதையாகவே உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. 13 உலகக் கோப்பைத் தொடர்களில் 8ல் இறுதிப் போட்டி வரை முன்னேறியது, அதில் 5 முறை கோப்பையை வென்றது என்பது மிகப் பெரிய சாதனை.
இந்த சாதனையை இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. அதிக முறை கோப்பை வாங்கிய அணியாக ஆஸ்திரேலியா தொடர்ந்து வீர நடை போட்டு வருகிறது. உலகக் கோப்பைத் தொடர்களில் ஆஸ்திரேலியாவின் உச்சத்தைப் பார்க்கலாம்.
1975ம் ஆண்டு நடந்த முதல் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வியுற்றது.
1987ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தனது முதல் உலகக் கோப்பையை வென்றது.
1996ம் ஆண்டு மும்பையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோல்வியுற்றது.
1999ம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா தனது 2வது உலகக் கோப்பையை வென்றது.
2003ம் ஆண்டு ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தனது 3வது கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.
2007ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி தனது ஹாட்ரிக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. இது அந்த அணிக்கு 4வது உலகக் கோப்பையும் கூட.
2015ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்தை இறுதிப் போட்டியில் சந்தித்து தனது 5வது உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது ஆஸ்திரேலியா.
2023ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரிலும் கூட ஆரம்பத்தில் சறுக்கலாக ஆடி வந்த ஆஸ்திரேலியா பின்னர் சுதாரித்து ஆடி ஒவ்வொரு வெற்றியாக தட்டிப் பறித்து இறுதிப் போட்டிக்கு வந்தது. இந்தியாவின் மிகப் பெரிய பவுலிங் பலத்தை முறியடித்து தனது 6வது கோப்பையை வென்று விட்டது ஆஸ்திரேலியா.
கிரிக்கெட்டுக்கு வாழ்த்துகள்!
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
{{comments.comment}}