டெல்லி: காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மேக்கான் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது வங்கிக் கணக்குகள் செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் பத்திரங்கள் குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக கட்சியின் பொருளாளர் அஜய் மேக்கான் கூறுகையில், இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வருமான வரிக் கணக்கு கட்டத் தாமதானதாக கூறி ரூ.210 கோடி அபராதம் விதித்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்
இது ஜனநாயகத்தின் மீது விழுந்த பேரிடி. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை. கட்சியின் தேர்தல் தயார் நிலையை சீர்குலைக்கும் நடவடிக்கை. இந்தியாவில் ஜனநாயகம் செத்துப் போய் விட்டது. ஒரு கட்சி ஆட்சி முறை நடப்பது போன்ற சூழல் உருவாகியுள்ளது. நீதித்துறையிடமும், மக்களிடமும், ஊடகங்களிடமும் நாங்கள் நீதி கேட்கிறோம் என்று கூறியிருந்தார் மேக்கான்.
கணக்கை முடக்கி வைத்ததற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது. மேலும் வருமான வரித்துறை குறை தீர்ப்பு ஆயத்திடமும் இந்த விவகாரத்தை காங்கிரஸ் கொண்டு சென்றது. அதைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் நான்கு வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியிருப்பதாக கூறப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் காசோலைகளை ஏற்க வேண்டாம் என்றும் வங்கிககளுக்கு உத்தரவு அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த வங்கிக் கணக்குகள் வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளன.
கடந்த 2018-2019ம் ஆண்டில் வருமான வரிக் கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 45 நாள் தாமதத்திற்காக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்குவது ஜனநாயக விரோதமானது, மிகத் தீவிரமானது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுபோன்ற கடுமையான நடவடிக்கை இதற்கு முன்பு எடுக்கப்பட்டதில்லை என்றும் அஜய் மேக்கான் கூறியுள்ளார்.
2026ல் சட்டமன்ற தேர்தல்.. நாலே கூட்டணிதான்.. விறுவிறுப்பாகும் கட்சிகள்.. பரபரக்கும் அரசியல் களம்!
தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு.. வானகரம் விழாவில் அறிவிப்பு!
பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.. அமைச்சர் பொன்முடி!
என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம்... டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
அதிமுக கூட்டணி அறிவிப்பு.. முதல்வர் மனதில் இடிபோல இறங்கியுள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி
தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருப்பதால்.. கூட்டணி குறித்து யோசித்து முடிவு எடுப்போம்.. பிரேமலதா
பாஜக திமுக மறைமுக கூட்டணி அம்பலமாகிவிட்டது.. தவெக தலைவர் விஜய்
அதிமுக- பாஜக கூட்டணி.. தோல்வி கூட்டணி.. முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் விமர்சனம்!
பொன்முடி பேச்சு.. ஏப்., 16ம் தேதி அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி!