எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

Apr 05, 2025,05:01 PM IST

சென்னை:  எம்புரான் படத்தின் இயக்குனரும், நடிகருமான பிருத்விராஜூக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.


பிருத்வி ராஜ் இயக்கத்தில், உருவான படம் லூசிபர். இதில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிகப் பெரிய வெற்றியையும், வசூலையும் இப்படம் பெற்றது. இதையடுத்து தற்போது லூசிபர் படத்தின் 2ம் பாகத்தை, எம்புரான் என்ற பெயரில் எடுத்துள்ளார். இதில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டாகியுள்ளது. 2 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது.


அதே நேரத்தில் சர்ச்சையிலும் சிக்கியது. இப்படத்தில் 2002ம் ஆண்டு குஜராத்தில் வெடித்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் குறித்த காட்சி இடம் பெற்றுள்ளது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மோகன்லால் மன்னிப்பு கேட்க, சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட சில காட்சிகளும் நீக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனரும் நடிகருமான பிருத்விராஜூக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.




கோல்ட், ஜன கன மன, கடுவா ஆகிய 3 திரைப்படங்களில் பிருத்விராஜ் இணை தயாரிப்பாளராக இருந்த நிலையில்,  ரூ.40 கோடி வரை சம்பளம் பெற்றார் என செய்திகள் வெளியாகின. இதையடுத்து கோல்ட், ஜன கன மன, கடுவா ஆகிய 3 படங்களின் வருமானம் தொடர்பான கணக்கு விவரங்களை சமர்ப்பிக்குமாறு  வருமானவரித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது. அந்த நோட்டீசில் வரும் ஏப்., 29ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


மறுபக்கம்  எம்புரான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரைடு நடத்தி கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்