Weather Report: இன்னும் ஒரு வாரத்திற்கு.. வறண்ட வானிலேயே நிலவும்.. மண்டை காயப் போகுது!

Jan 22, 2024,06:58 PM IST

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வடகிழக்கு பருவமழை முடிந்து தற்போது பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்நிலையில் தென்னிந்திய கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 28ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் உறைப்பனி ஏற்பட வாய்ப்புப்ள்ளது.


சென்னையை  பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி  நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் அதிகாலை வேளையில் நகரின் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும்  அறிவித்துள்ளது.




மழைக்காலம் முடிந்து தற்போது பனிக் காலம் நடந்து வருகிறது. இது முடிந்ததும் காத்திருக்கிறது சூப்பரான வெயில் காலம். இப்போதெல்லாம் எது வந்தாலும் ரொம்பவும் உக்கிரமாகத்தான் இருக்கிறது. மழைக்காலத்தில் நாம பட்ட பாட்டை எல்லோரும் மறந்திருக்க முடியாது. எனவே இந்த வருடம் வெயில் காலமும் சிறப்பாகவே இருக்கும் என்று மக்கள் அச்சத்துடன் காத்துள்ளனர்.


அடிக்கப் போற வெயிலை நினைச்சா இப்பவே கண்ணு வேர்க்குதே என்று சொல்லாத குறையாக மக்கள் வியர்த்து விறுவிறுத்துப் போய்க் காத்துள்ளனர்.. பரவாயில்லை மிஸ்டர் வெயில்.. நீங்க எவ்வளவு அடிச்சாலும் நாங்க நல்லாவே தாங்குவோம்.. வர்லாம் வர்லாம்!

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்