இஸ்லாமாபாத் : ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் சுத்தமே இல்லை என இஸ்லாமாபாத் கோர்ட்டில் மனு அளித்து புகார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவி வகித்தபோது தனக்கு வந்த பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் விற்று காசாக்கி தானே வைத்துக் கொண்ட வழக்கில், வழக்கில் ஆகஸ்ட் 05 ம் தேதி இம்ரான் கான் குற்றவாளி என இஸ்லாமாபாத் குற்றவியல் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
தீர்ப்பு வெளியாகி சில நிமிடங்களிலேயே லாகூர் உள்ள அவரது வீட்டில் வைத்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டு, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அடோக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இம்ரான் கான் தரப்பில் அவரது வழக்கறிஞர் நேற்று இஸ்லாமாபாத் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சிறையில் இம்ரான் கானுக்கு பயங்கரவாதிகள் அடைக்கப்படும் சி கிளாஸ் அறை தான் ஒதுக்கப்பட்டுள்ளது. கதவு, ஜன்னல் எதுவும் இல்லாத திறந்த கழிவறை தான் உள்ளது. காலை, மாலை என எந்த நேரமும் கொசுக்கள் மற்றும் எறும்புகள் தொல்லை உள்ளது. சிறையில் கொஞ்சம் கூட சுத்தமே இல்லை. துர்நாற்றம், தூசு தான் உள்ளது.
இம்ரான் கானுக்கு டாக்டர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட யாரையும் சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதிக்க மறுக்கிறது. ஆனால் அவருக்கு வழங்கப்படும் உணவில் எந்த பிரச்சனையும் கிடையாது. சிறையில் சிறிதாக 99 சதுரடி மட்டுமே இட வசதி உள்ளதால் அவரால் பிரார்த்தனை கூட செய்ய முடியவில்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான் கானின் வழக்கறிஞர், ஒரு முன்னாள் பிரதமர் இப்படி அடிமையை போல் நடத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
Govt Holidays 2024: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
{{comments.comment}}