சென்னை: சென்னை கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக பணிபுரிந்து வந்த பாலாஜியை, விக்னேஷ் என்பவர் தனது தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி ஏழு இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் மருத்துவர் பாலாஜி படுகாயம் அடைந்தார். உடனே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவரை தாக்கிய விக்னேஷ் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியது .
இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை பார்ப்பதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனைக்குள் வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்களை கண்காணிக்க ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நோயாளிகளுடன் வருபவர்களுக்கு சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், ஆகிய நான்கு வண்ணங்களில் அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. சிவப்பு நிறம் தீவிர சிகிச்சை பிரிவு, மஞ்சள் நிறம் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு, பச்சை நிறம் சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு, நீல நிறம் பொது மருத்துவம் என பிரிக்கப்பட்டுள்ளது.
அதில் நோயாளிகளின் பெயர், அட்டெண்டர் பெயர், வார்டு பெயர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. முதற்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் வருபவர்கள் டேக் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த டேக் கையில் கட்டி இருந்தால் தான் மருத்துவமனைக்கு உள்ளே வரவும் வெளியே செல்ல அனுமதி வழங்கப்படும். இந்த நடைமுறை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் படிப்படியாக செயல்பாட்டில் வரும் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
{{comments.comment}}