ஏலே.. இந்தியா கூட்டணியை ஆதரித்து.. ஏப் 9 டூ 12.. இமான் அண்ணாச்சி தேர்தல் பிரச்சாரமாம்லே!

Apr 04, 2024,05:08 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணி கட்சிகளை ஆதரித்து நடிகர் இமான் அண்ணாச்சி ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை பல்வேறு இடங்களுக்குச் சென்று அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.


இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாட்டில் போட்டியிடும் இந்தியா கூட்டணி கட்சிகள் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆதரித்து முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சி சார்ந்த தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




இதில் நடிகர், நடிகைகள் பாட்டுப் பாடியும், ஜாலியாக பேசியும் வாக்கு சேகரிப்பார்கள் என்பதாலும், அவர்களை வேடிக்கை பார்க்க கூட்டம் அலைமோதும் என்பதாலும் எப்போதுமே இந்த ஸ்டார் பேச்சாளர்களுக்கு தனி மவுசு இருக்கும். அந்த வரிசையில் தற்போது பல நட்சத்திர பேச்சாளர்கள், காமெடி நடிகர்கள் என லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.


இந்த நிலையில் பேச்சாளரும், காமெடி நடிகருமான இமான் அண்ணாச்சி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சார விவரத்தை திமுக வெளியிட்டுள்ளது. 


ஏப்ரல் 8ஆம் தேதி- மத்திய சென்னை, ஏப்ரல் 9ஆம் தேதி -வட சென்னை, ஏப்ரல் 10ஆம் தேதி- நீலகிரி, ஏப்ரல் 11ஆம் தேதி- திருப்பூர், ஏப்ரல் 12ஆம் தேதி- கோயம்புத்தூர், ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற  தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இமான் அண்ணாச்சி தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!

news

சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்

news

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!

news

வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

news

இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!

news

மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

news

மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்