ஒன்னையே தங்க முடியல.. இதுல ரெண்டா?.. ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு உருவாகிறது.. வானிலை மையம்

Oct 18, 2024,02:24 PM IST

சென்னை:   வங்கக்கடல், அரபிக்கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


வடகிழக்கு பருவ மழை ஆரம்பத்திலேயே தமிழகத்தை ஒரு தாக்கு தாக்கி சென்றுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் வட தமிழகத்தில் அதிக அளவில் மழை பெய்யும் என்று கூறப்பட்ட நிலையில், அது ஆந்திராவை நோக்கி நகர்ந்ததால் தமிழகம் தப்பித்தது.




இந்தநிலையில், தற்போது வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில், அதுவும் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு பகுதியில் காற்று சுழற்சி நிலவி வருகிறது. மத்திய அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், அதனை தொடர்ந்து மத்திய வங்கக் கடலில் வரும் 22ம் தேதியன்று  குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும் இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு திசையை நோக்கி நகரும் என்றும், மேற்கு-வடக்கு திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி இந்திய பகுதியை விட்டு விலகி செல்லும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்ததாக அக்டோபர் 22ம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இந்த புயல் வடக்கு நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.


எப்படியோ 2வது ரவுண்டிலும் நாம தப்பிச்சுருவோம் போல.. வரட்டும் வரட்டும்.. எத்தனை ரவுண்டு வந்தாலும் சமாளிப்போம்ல!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டிஎன்பிஎஸ்சி குரூப் 5 அறிவிப்பு வந்தாச்சு.. சட்டுப்புட்டுன்னு சீக்கிரம் அப்ளிகேஷனை போடுங்க!

news

சென்னையில் இந்தி மாதம்.. தமிழை சிறுமைப்படுத்தாதீர்கள்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

news

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

news

4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. நாளை மறுநாள் 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

news

பாக்கெட் சாராயத்தை ஊத்து.. STOP... புதுச்சேரியில் இனிமேல் விற்பனை கிடையாது.. தடை!

news

புரட்டாசி மாதம் முடிஞ்சிருச்சு.. புதுக்கோட்டை சந்தையில்..ஆடு விற்பனை அமோகம்.. வியாபாரிகள் ஹேப்பி!

news

ஒன்னையே தங்க முடியல.. இதுல ரெண்டா?.. ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு உருவாகிறது.. வானிலை மையம்

news

துரோகம் உள்ளே நுழைந்ததால்.. அதலபாதாளத்திற்குப் போய் விட்டது அதிமுக.. சொல்கிறார் ஓபிஎஸ்

news

சென்னையில் வைத்து.. இந்தி வார கொண்டாட்டமா.. மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்