தமிழ் நாட்டில் வெயில்- மழை கலந்து கலக்கும்.. வெப்ப அலைக்கும் வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

Apr 18, 2024,01:49 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலைக்கு வாய்ப்புள்ளதாகவும், இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வழக்கத்திற்கு மாறாக வெயில் காலம் ஒரு மாதத்திற்கு முன்னரே இந்த வருடம் ஆரம்பித்து விட்டது. வெயிலில் கொடுமை அதிகம் என்பதால் மக்கள் செய்வது அறியாது திகைத்துள்ளனர். தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெளியில் வாட்டி வதைத்தாலும், குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தென் மாவட்ட மக்கள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர்.


ஈரோடு, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் 105 முதல் 107 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருக்கிது. இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 5 தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், இன்று தொடங்கி 21ம் தேதி வரை, அடுத்த மூன்று தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை   தமிழகத்தில் படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். அதற்கு அடுத்த இரண்டு தினங்களில் சற்றே குறையக்கூடும்.




அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட  தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37-40 டிகிரி செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34-38 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். 


இன்று தொடங்கி 19ம் தேதி வரை, காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 சதவீதம் ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 சதவீதம் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 சதவீதம் ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம்.  நாளையும், நாளை மறுதினமும் வட தமிழக உள்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்