சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சியானது அடுத்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகவுள்ளதால் தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது மேலும் வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும்.
15.12.2024 மற்றும் 16.12. 2024
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
17ம் தேதி
கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை - 18ம் தேதி கன மழை
தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் விதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கன முதல் மிக கனமழையும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
19ஆம் தேதி
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
20, 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!
Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!
மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}