சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் என்னை வரவேற்றது, ரசிகர்கள் என்னை வாழ்த்தியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த கட்டமாக 13 நாடுகளில் சிம்பொனியை அரங்கேற்ற இருக்கிறேன். சிம்பொனியை யாரும் டவுன்லோட் செய்து கேட்காதீர்கள். அதனை நேரில் உணர வேண்டும். நம் மண்ணிலும் விரைவில் நடக்கும். அதுவரை காத்திருங்கள் என இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.
இசைஞானி இளையராஜா கடந்த எட்டாம் தேதி மேற்கிந்திய பாரம்பரிய படி முதன் முறையாக வேலியன்ட் என்றும் தலைப்பில் சிம்பொனி இசையை லண்டனில் உள்ள அப்போலோ அரங்கத்தில் அரங்கேற்றினார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று இந்தியா திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அரசு முறை மரியாதை அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பில் பல்வேறு திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா கூறியதாவது,
மலர்ந்த முகத்தோடு நீங்கள் என்னை வழியனுப்பி வைத்து, இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள் விதித்தார். இது சாதாரண விஷயம் அல்ல. மியூசிக் எழுதியிருக்கலாம்; மியூசிக் எழுதி கொடுத்தா அவர்கள் வாசித்திரலாம். ஆனால் ஒவ்வொரு இசைக் கலைஞர்களும் ஒவ்வொரு விதமாக வாசித்தால் எப்படி இருக்கும். இதனை அரங்கேற்றம் போது அந்த விதிமுறைகளை மீறி அதிலிருந்து தவறாமல் 80 பேரும் சரியாக கவனமாக ஒரே நோட்டில் இருந்து வாசிக்கும் பொழுது கேட்பவர்கள் எல்லாம் மூச்சு விட கூட மறந்து ஆ என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு சுவரத்துக்கே இதுபோல் என்றால் சிம்பொனி முழுவதும் நான்கு பகுதிகளாக கொண்டவை. சிம்பொனி வாசித்து நான்கு பகுதிகளும் வாசித்து முடியும் வரைக்கும் கைதட்ட மாட்டார்கள். கைதட்ட கூடாது; அது விதிமுறை. ஆனால் அங்கு வந்திருந்த ரசிகர்களும்,பொது மக்களும் அனைவரும் ஃபர்ஸ்ட் பகுதி முடிந்த உடனேயே கைதட்ட தொடங்கி விட்டார்கள். வாசிக்கிற 80 பேருக்கும் மிகப்பெரிய ஆச்சரியம். அப்படி ஒவ்வொரு பகுதி இசையின் அமைப்பையும் கேட்டு விட்டு அவர்களால் தாங்க முடியவில்லை. கைதட்டி பாராட்டு தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்கள். இது எல்லா இசை வல்லுனர்களாலும் பாராட்டப்பட்ட சிம்பொனி. நீங்கள் அனைவரும் என்னை மனதார வாழ்த்தி வழியனுப்பினீர்கள் அல்லவா. அந்த மகிழ்ச்சியில் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கக்கூடிய ஒரு பெரிய நிகழ்ச்சியாக இது மாற்றம் பெற்றிருப்பது இறைவனுடைய அருளால், அதுவும் முதல்வர் அவர்கள் என்னை வரவேற்றது என் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. முதல்வர் அரசு மரியாதையுடன் என்னை வரவேற்பது, தமிழக மக்கள் அனைவரும் என்னை வாழ்ந்து கொண்டிருப்பது வரவேற்பது, எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
இந்த இசை நிகழ்ச்சியை, இசையை நீங்கள் டவுன்லோட் செய்து கேட்கக் கூடாது. இதனை நேரடியாக கேட்க வேண்டும். மக்களே நான் நேரடியாக இசைத்த அந்த அனுபவத்தை கூற முடியாது. அது வேற. 80 பேர் வாசிக்கும் கருவிகளையும் அப்படியே கேட்க வேண்டும்.
நம் மண்ணிலும் நடக்கும் ரசிகர்களும் பொதுமக்களும் அதுவரை காத்திருக்க வேண்டும். இந்த சிம்பொனி இசையை அனைவரும் மகிழ்ச்சியுடன் பாராட்டி ரசித்தனர். இந்த சிம்பொனி இசை 13 தேசங்களில் அரங்கேற்ற இருப்பது நாட்கள் உறுதியாகிவிட்டது. குறிப்பாக அக்டோபர் ஆறாம் தேதி துபாயில் சிம்பொனி இசையை அரங்கேற்ற இருக்கிறேன். செப்டம்பர் 6ல் பாரிசில் இசைக்கிறேன். பிறகு ஜெர்மன், பிரான்ஸ், இப்படி எல்லா நாடுகளுக்கும் இந்த சிம்பொனி இசை போகிறது. தமிழர்கள் இல்லாத இடத்திலும் கூட சிம்பொனி இசையை அரங்கேற்றுவதற்கு ஸ்பான்சர்கள் பதிவு செய்து விட்டனர்.
நம்ம நாட்டிலும் நம் மக்களை கேட்க வைக்க வேண்டாமா. நம் மண்ணிலும் நடக்கும். எல்லோரும் கேட்கிற வரைக்கும் அமைதியாக காத்திருக்க வேண்டும். அந்த மொமென்டை, அந்த ஸ்பாட்டில் இருந்து அந்த கையை காட்டுகிறதும், அந்த அமைதியோடு இருந்து ரசிக்க வேண்டும். அந்த இசை பாரம்பரியத்தில் இது மிகவும் உச்சகட்டமான விஷயம். ஆனால் என் மீது அன்பு கொண்ட எந்நாட்டு மக்கள் என்னை தெய்வமாக கொண்டாடுகிறவர்களாக இருக்கிறார்கள். எப்படி இருந்தாலும் நான் சாதாரண மனிதனைப் போல தான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். என்னைப் பற்றி எனக்கு எந்தக் எண்ணமும் கிடையாது. இசை கடவுள் என்று சொல்லும்போது எனக்கு என்ன எண்ணம் தோன்றுகிறது தெரியுமா. இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறங்கிட்டீங்களேப்பா என்று தான் எனக்கு தோன்றும். உங்கள் மலர்ந்த முகம் என்னை வரவேற்பதற்கு மிகவும் நன்றி, மிகவும் நன்றி.
இந்த இசை உலகமெங்கும் கொண்டு செல்லப்படும். இத்துடன் நிற்கப் போவது கிடையாது. இதுதான் ஆரம்பம். 82 வயதாகிவிட்டது. இனிமேல் என்ன செய்யப் போகிறார் என்று நினைக்காதீர்கள். பண்ணைபுரத்தில் இருந்து என்னுடைய காலில் இருந்து தான் வந்து, இப்போதும் என்னுடைய சொந்த காலில் தான் இருக்கிறேன் என்பது இளைஞர்கள் உணர வேண்டும்.அவர்களும் அவர்களது வாழ்க்கையில் என்னை முன் உதாரணமாக
வைத்துக் கொண்டு அவரவர் துறைகளில் மென்மேலும் வளர்ந்து நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அறிவுரை நன்றி என கூறினார்.
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}