அவன் ஊர்டா அது.. வெள்ளம் வந்தா அவன் போகாம வேற யார்டா போவா..வடிவேலு பொளேர்!

Dec 21, 2023,03:07 PM IST

சென்னை:  மாரி செல்வராஜ் ஊர்ல வெள்ளம் வந்தா அவரு போக கூடாதா?  என்று கேள்வி எழுப்பி அவரை விமர்சிப்போருக்கு பதிலடி கொடுத்துள்ளார் "வைகை புயல்"  வடிவேலு.


தன் சொந்த ஊர் மக்களுக்காக  ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டு நூற்றுக்கணக்கான மக்களை மீட்டு பத்திரமான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் இயக்குனர் மாரிசெல்வராஜ். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்து மக்களை உலுக்கி விட்டது. 


இவ்வளவு பெரிய மழை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தடாலடியாக வந்து ஒரு கலக்கு கலக்கி மக்களையும் கலங்க வைத்து விட்டு சென்றுள்ளது கனமழை. இந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகள் தற்போது வேகம் பிடித்துள்ளன.  பொதுமக்களுக்கு  தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.




இப்படி ஒரு பெரு வெள்ள பாதிப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதை பார்த்த இயக்குனர் மாரிசெல்வராஜ் தனது மன வேதனையை அறிக்கையாக வெளியிட்டிருந்தார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இரவோடு இரவாக களத்தில் குதித்து, தன் சொந்த மாவட்டமான தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டு நூற்றுக்கணக்கான மக்களை மீட்கும் பணியில் இறங்கினர்.


உள்ளூர் மக்களோடு இணைந்து அவர் பாதிக்கப்பட்டோரை மீட்டு படகுகளில் அனுப்பி வைத்தார். தனது எக்ஸ் தளத்தில், கருங்குளம் பஸ் ஸ்டாப் அருகே இரண்டு நாட்களாகச் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்... இப்போது வரை பத்து பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.. எல்லாரும் நிச்சயமாய் மீட்கப்படுவார்கள் உறவினர்கள் அச்சப்பட வேண்டாம் என்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அத்துடன் உதயநிதியின் பதிவில் அவருடன் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் நின்றிருந்த படங்களையும் வெளியிடப்பட்டிருந்தார். 


அதை பார்த்த சிலர்,  மாரி செல்வராஜுக்கு அங்கு என்ன வேலை என்ற தொனியில் கேள்வியை முன்வைக்க ஆரம்பித்தனர். இதே பதிவில் சிலர் தரக்குறைவாக மாரி செல்வராஜின் செயலுக்கு பதிவிட்டனர். பலர் பலவிதங்களில் கமண்ட் செய்து வந்தனர். இது சலசலப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் வடிவேலு காரசாரமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், மாரி செல்வராஜ் ஊர்ல வெள்ளம் வந்தா அவரு போக கூடாதா? அவரு ஊர்டா இது. எங்க பள்ளம் இருக்கும், மேடு இருக்குனு அவனுக்கு தான் தெரியும். ஏ போகக்கூடாதா? இவ ஏன் போறானா... எவன் எந்த சந்துல கத்துறான்.. ஏன் கத்துறான்னு அவனுக்கு தான் தெரியும். என் ஊருக்கு வெள்ள வந்தா நான் போகக் கூடாதா.


இந்த மாதிரி சூழலில் ஒரு அணில் கொய்யாப் பழத்தை மரத்துல இருந்து  தூக்கிப் போட்டாக் கூட அதுக்கு நாம நன்றி சொல்லணும்.. பூராம் தப்புத் தப்பா பேசறாய்ங்க.. என்று தனது பாணியில் சரவெடியாக பேசியுள்ளார் வடிவேலு.


கடைசில சாந்தமா இருக்கிற "புயலை"யே கோபப்படுத்திப் பாத்துட்டாய்ங்களே!

சமீபத்திய செய்திகள்

news

சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்