Power of Alliance: அதிமுகவும் பாஜகவும் கை கோர்த்தால்.. அதிர வைக்கும் டேட்டா.. உஷாராகுமா திமுக?

Jun 04, 2024,05:28 PM IST

சென்னை : நடந்து முடிந்த லோக்சபா தேர்தலை பொறுத்தவரை அதிமுக.,விற்கும் சரி, பாஜக.,விற்கும் சரி ஓவர் பில்அப் கொடுக்கப்பட்டது.  இரு கட்சிகளுமே ஈகோ பிரச்சினையால் தனித் தனியாக பிரிந்து சென்று களம் கண்ட நிலையில் தற்போதைய ரிசல்ட் பல புதிய தகவல்களை வெளிப்படுத்துவதாக உள்ளது.


இந்தத் தேர்தலில், ஆளும் கட்சியான திமுக.,விற்கு கடும் டஃப் கொடுப்பார்கள், அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும், திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் அதிமுக.,விற்கு தான் இந்த முறை அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது என சொல்லப்பட்டது. அதே போல் பாஜக.,விற்கும் 10 இடங்களுக்கும் குறையாமல் கிடைக்கும் என சொல்லப்பட்டது. அதற்கேற்ப அந்தக் கட்சித் தலைவரும் விடாமல் பேசி வந்தனர்.


அதிமுக.,வும் சரி, பாஜக.,வும் சரி கடைசி நிமிடம் வரை கூட்டணி தொடர்பான முக்கியத்துவத்தை மிக குறைவாகவே மதிப்பிட்டு விட்டன. முதலில் இருவரும் பிரிந்ததே அந்தக் கட்சிகளுக்கு முதல் சறுக்கல் ஆகும். இரு கட்சிகளுமே பலவீனமாக உள்ள நிலையில் இணைந்துதான் போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யத் தவறியது இருவரின் தவறாக போய் விட்டது.




அடுத்து கூட்டணியை உருவாக்குவதிலும் இரு கட்சிகளும் சறுக்கின. அதிமுக கடும் போராட்டம், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கடைசி நிமிடத்திலேயே தேமுதிக.,வை கூட்டணியில் சேர்த்துக் கொண்டது. பாமகவை தவற விட்டது. அதிமுக கூட்டணியில் தேமுதிக.,விற்கு 5 சீட்கள் ஒதுக்கப்பட்டது. அதே போல் பாஜக கூட்டணியிலும் தமிழ் மாநில காங்கிரசை தவிர வேறு எந்த கட்சியும் இல்லாமல் இருந்தது. கடைசி நிமிடத்திலேயே பாமக, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போய் இணைந்தன.


அதிமுக மற்றும் பாஜக இரண்டும் பெரிய கட்சிகள் என்பதால் அவற்றை வைத்து தான் கூட்டணி கட்சிகளுக்கு பலம் என இரு கட்சிகளுமே கூட்டணி கட்சிகளை குறைத்து எடை போட்டு விட்டன. ஆனால் பெரிய கட்சிகள், செல்வாக்கு உள்ள கட்சிகள் என சொல்லப்பட்ட அதிமுக, பாஜக.,வின் வேட்பாளர்களில் ஒருவர் கூட முன்னிலையில் இல்லை. இந்தக் கட்சிகளின் ஒரு வேட்பாளர் கூட ஒரு சுற்றில் கூட முன்னிலை வகிக்கவில்லை. 


மாறாக அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான தேமுதிக.,வின் விஜய பிரபாகரன், பாஜக கூட்டணி கட்சி வேட்பாளரான பாமக.,வின் செளமியா அன்புமணி ஆகியோர் தொடர்ந்து  பல சுற்றுக்களில்  முன்னிலையில் இருந்து எதிர் அணியினரை மிரட்டி விட்டனர். கடுமையான போட்டியைக் கொடுத்த பின்னரே அவர்கள் வீழ்ந்தனர்.




தலைமை கட்சிக்களுக்கு கிடைக்காமல் கூட்டணி கட்சிகளுக்கு இத்தனை உயர்வு கிடைக்கும்  வாய்ப்பு ஏற்பட்டது என்றால் தமிழகத்தில் அதிமுக, பாஜக.,விற்கு இருக்கும் செல்வாக்கு என்ன ஆயிற்று? தமிழகத்தில் பாஜக.,வின் பிரச்சாரம், மோடி அலை ஆகியவை எடுபடவில்லையா? இருவரின் பலமும் தனித்து வெல்லும் தகுதியைப் பெறத் தவறினவா என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இருவரும் அவரவர் பலத்தை உணர்ந்தும் கூட தனித்துப் போக முடிவெடுத்ததற்கு இரு கட்சிகளின் தலைவர்களின் தனிப்பட்ட ஈகோதான் காரணமா என்ற மிகப் பெரிய கேள்வியும் எழுகிறது.


இதற்கிடையே, சில புள்ளி விவரங்களைப் பார்த்தால் அதிமுக - பாஜக இணைந்து போட்டியிட்டிருந்தால் 14 தொகுதிகள் வரை வென்றிருக்கக் கூடிய வாய்ப்புகளை உணர்த்துகின்றன. இது நிச்சயம் திமுகவுக்கு கெட்ட செய்தி. அதிமுகவின் பலம் அப்படியே இருக்கிறது. அதேசமயம், பாஜக புதிய பலத்துடன் வளர்ந்துள்ளது. இருவரும் ஈகோ காரணமாகவே பிரிந்துள்ளனர். இவர்கள் சட்டசபைத் தேர்தலின்போது இணைந்து போட்டியிட முடிவு செய்தால், அது நிச்சயம் திமுகவுக்கு சவாலாக இருக்கும். எனவே இப்போதிருந்தே திமுக சுதாரிப்புடன் செயல்பட்டால்தான் அடுத்த சட்டசபைத் தேர்தலில் இந்த கூட்டணி உருவானாலும் கூட அதை முறியடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிமுக - பாஜக இணைந்திருந்தால் வென்றிருக்கக் கூடிய தொகுதிகள்:


தர்மபுரி, திருப்பூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, தென்காசி, நாமக்கல், பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர்,  சிதம்பரம் தனி, விழுப்புரம் தனி, கோயம்பத்தூர், நீலகிரி. இந்தத் தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை விட அதிமுக - பாஜக வேட்பாளர்களின் கூட்டு வாக்குகள் அதிகமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்