சென்னை: இட்லி கடை படம் தற்போது தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமடமாக்கப்பட்டு வரும் நிலையில் 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும், மீதமுள்ள காட்சிகள் படமாக்க இந்த வாரம் பாங்காங் செல்ல இருப்பதாகவும் பட குழு அறிவித்துள்ளது.
தனுஷ் இயக்கி அவரே நடித்த ராயன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி முடித்து விட்டார் நடிகர் தனுஷ். இப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாக உள்ளது. இதற்கிடையே இப்படத்தின் கோல்டன் ஸ்பேரோ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இதனால் படத்தின் கதைக்களம் அடுத்தடுத்த பாடல்கள் சும்மா பட்டைய கிளப்பும் என ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்காக எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் தனது அடுத்த படைப்பான இட்லி கடை என்ற படத்தை நடித்து இயக்கி வருகிறார் நடிகர் தனுஷ்.
சமீபத்தில் இப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதையடுத்து தனுஷ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படத்தை தனுசுடன் இணைந்து ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். கிரண் கவுசிக் ஒளிப்பதிவு செய்ய ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் தனுஷ் இயக்கத்தில் நான்காவது படமாகும். இதில் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே என மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இட்லி கடை படம் தற்போது தேனி பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக படபிடிப்பு நடைபெற்று வருகின்றது. இதுவரை 80 சதவீதம் காட்சிகளை படமாக்கி முடித்து விட்டனர். மீதமுள்ள 20% காட்சிகளை படமாக படக்குழுவினர் இந்த வாரம் பாங்காங் செல்ல திட்டமிட்டுள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது.
நயன்தாரா விடுத்த பரபரப்பான அறிக்கை, நெட்பிளிக்சில் வெளியான அவரது டாக்குமெண்டரியில் தனுஷ் ஆட்சேபித்த காட்சிகள் இடம் பெற்றது என ஒரு பக்கம் அனல் பறந்து வந்தாலும் தன்னுடைய படப்பிடிப்பிலும் தனது நோக்கத்திலும் மிகத் தெளிவாக இருக்கும் தனுஷ் தனது வேலைகளை அசராமல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!
Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!
மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}