இப்படியும் ஒரு முதலாளி.. ஊழியர்களை "ஷேர்ஹோல்டர்" ஆக்கி அழகு பார்த்த  சூப்பர் "பாஸ்"!

Jan 03, 2024,01:15 PM IST

சென்னை: சென்னையை சேர்ந்த ஐடி நிறுவன முதலாளி  தனது ஊழியர்களுக்கு 33 சதவீத பங்குகளை பிரித்து கொடுத்து அவர்களை நிறுவனத்தின் ஷேர்ஹோல்டர் ஆக்கி அசத்தியுள்ளார். இந்த சம்பவம் அந்த நிறுவன ஊழியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.


பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் தான் தருவார்கள். இன்னும் சிலர் விலை உயர்ந்த பரிசுகளை அளிப்பதும் உண்டு. அதிலும் சிலர் கார், வீடு போன்ற பெரிய பரிசுகளை அளித்தும் ஆச்சரியப்படுத்தவது உண்டு. சில நிறுவனங்களோ சம்பளத்தை தருவதற்கே அழுவார்கள், அவங்களைப் பத்தி இப்ப பேச வேண்டாம். விட்ரலாம்.




இப்படி முதலாளிகள் பல வகை இருக்கிறார்கள். இந்த நிலையில், இவற்றையெல்லாம் தாண்டி ஒரு ஐடி நிறுவன பாஸ், தனது ஊழியர்களுக்கு பங்குகளை பிரித்து கொடுத்து அவர்களையும் முதலாளி ஆக்கி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார். 


சென்னையை சேர்ந்த ஐடியாஸ்2 நிறுவனத்தின் நிறுவனர் முரளி  விவேகானந்தன்தான் இப்படி அசத்தியுள்ளார். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சீனியர்கள், அதாவது 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது இந்த நிறுவனம். 5 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்த 38 பேர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு நிறுவன பங்கில் இருந்து 33 சதவீத பங்குகளை ஒதுக்கி நிறுவனத்தின் பங்குதாரர்களாக மாற்றியுள்ளது. அந்த 38 பேரும் தற்பொழுது ஊழியர்கள் மட்டுமின்றி நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் ஆகியுள்ளனர். 




நிறுவனத்தின் பங்குதாரர்கள் என்றால் அவர்களும் முதலாளிகள் தானே.. ஊழியர்களை முதலாளி ஆக்கி அவர்களை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியுள்ளார் அந்த நிறுவன உரிமையாளர். இது மட்டுமே இன்னொரு ஸ்பெஷல் ஐட்டமும் இருக்கு.


நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் 50 ஊழியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு கார் பரிசளித்துள்ளார்கள்.  கார் என்றால் அனைவருக்கும் ஒரே கார் அல்ல. அவரவர்களுக்கு பிடித்தமான கார்களை வாங்கிக் கொடுத்து பரிசளித்துள்ளார். இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் 100 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு கார் பரிசு வழங்க இருப்பதாகவும், சில குறிப்பிட்ட ஊழியர்களுக்கு நிறுவனத்தின் பங்குகளை ஒதுக்க இருப்பதாகவும் ஐடியாஸ்2  நிறுவனம் தெரிவித்துள்ளது.




கார் உள்ளிட்ட பரிசுகளை நிறுவனர்கள் முரளி விவேகானந்தன், பவானி ராமன் ஆகியோர் வழங்க தலைமை செயலதிகாரி காயத்ரி விவேகானந்தன், இயக்குநர் அருண் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த நிறுவனம் கடந்த 2022 ம் ஆண்டு இதேபோல செய்திருந்தது நினைவிருக்கலாம்.


சூப்பர்ல!

சமீபத்திய செய்திகள்

news

தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!

news

தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவு தினம்.. மதுரையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்!

news

கந்த சஷ்டி விரதம் 2024 : கோவிலுக்குப் போகாமல்.. வீட்டிலேயே எளிமையாக விரதம் இருக்கும் முறை

news

கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

news

கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!

news

மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!

news

35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி

news

வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

news

சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்