வெற்றி வாய்ப்பு யாருக்கு.. "நரேந்திர மோடி" யாருக்கு சாதகம்?.. Predictions சொல்வது என்ன?

Nov 19, 2023,11:19 AM IST

அகமதாபாத்: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்த கணிப்புகள் வெளியாகி உள்ளன.


ரசிகர்கள் ஆவலடன் எதிர்பார்த்து காத்திருந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக பகல் 2 மணிக்கு துவங்குகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் இறுதிப் போட்டியில் சந்தித்துள்ளன. கடைசியாக 2003 உலகக் கோப்பைப் போட்டி இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோதியிருந்தன. அதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அப்போது கங்குலி கேப்டனாக இருந்தார்.



ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 11ஆம் தேதி துவங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட பத்து அணிகள் பங்கேற்று விளையாடின. இந்திய அணி இதுவரை பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அதிக புள்ளிகள் உடன் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும் மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவும் நான்காவது இடத்தில் நியூசிலாந்தும் உள்ளன.


ஜெயிக்கப் போவது யாரு: 


தற்போது இறுதிப் போட்டியில், யார் வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றுவார்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நரேந்திர மோடி மைதானத்தை பொறுத்தவரை யாருக்கு சாதகமாக இருக்கும் , யாருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து நிபுணர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர்.


வானிலையை பொறுத்த வரை இன்று மழை ஏதும் இருக்காது. அதே சமயம் மாலை நேரத்தில் அதிக அளவில் உஷ்ணம் இருக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது வீரர்களுக்கு அதிக வியர்வையையும் தாகத்தை ஏற்படுத்தும். 


அதுமட்டுமின்றி இந்திய அணியின் டாப் ஸ்பின்னர் களில் ஒருவரான அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே பங்கேற்றார். அதற்குப் பிறகு அவருக்கு தொடர்ந்து ஓய்வு அளிக்கப்பட்டு வந்தது. அவர் களமிறங்க மாட்டாரா என இந்தியா விளையாடிய அனைத்து மேட்ச்களிலும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அஸ்வின் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் ரசிகர்கள் சோர்வடைந்தனர்.


ஆனால் இன்றைய இறுதிப் போட்டியில் அஸ்வின் களம் இறக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் விளையாடுவதாக இருந்தால் சூர்யகுமார் யாதவுக்கு ஓய்வளிக்கப்படலாம். இருப்பினும் அஸ்வின் இல்லாத குறையை இந்திய வேகப் பந்து வீச்சாளர்கள் தீர்த்து வருகின்றனர். குறிப்பாக முகமது ஷமி அதிக விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதுவரை விளையாடிய போட்டிகளில் 23 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். அதனால் இவை அனைத்தும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.




அட்டகாசமான ஆல் ரவுண்ட் டீம்:


ரன்களை பொறுத்தவரை விராட் கோலி 711 ரன்களைக் குவித்து பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் 550 ரன்கள் எடுத்து ரோகித் சர்மா, இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர்கள் இருவருமே இந்திய அணி அதிக அளவில் ரன் குவிப்பதற்கு மிகப்பெரிய பலமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


மைதானத்தை பொருத்தவரை இது ஸ்பின் பவுலர்களுக்கே அதிக சாதகமானதாகும். இதனால் இந்தியாவுக்கே இன்றைய உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது. ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் இங்கு முக்கியப் பங்காற்றுவார்கள். ஜடேஜாவுக்கு இது ஹோம் கிரவுண்டும் கூட. மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருப்பது இந்தியாவுக்கு கூடுதல் பலமாகும். நல்ல ஸ்பின்னர்கள் இருப்பது, நல்ல பேட்ஸ்மேன்கள் இருப்பது, நல்ல பீல்டிங் என்று இந்தியா பல வகையிலும் பாசிட்டிவான பகுதியில்தான் உள்ளது.


நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியா அணி  தோல்வி அடைந்தது . அதுவும் இந்தியாவிடம் தோல்வியைச் சந்தித்தது. எனவே இந்தியாவிடம் பெற்ற தோல்விக்கு பிறகு பழி தீர்க்க இன்று அது முயலக் கூடும். முழு பலத்தையும் பயன்படுத்தி, புதிய யுத்திகளை கையாண்டு நம்மை வீழ்த்த அது நிச்சயம் முயலும். லீக் சுற்றில், அடுத்தடுத்து தொடர்ந்து எட்டு வெற்றிகளை குவித்துள்ளது ஆஸ்திரேலியா. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் புதிய உத்வேகத்துடன் இறுதிப்போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




குரலை அடக்குவோம்.. கம்மின்ஸ் நக்கல் பேச்சு


"இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு ஆதரவாக 1 லட்சம் பேர் மைதானத்துக்குள் குரல் கொடுக்கப் போகிறார்கள். அது மிகப் பெரிய விஷயம்.. ஆனால் அந்த 1 லட்சம் குரலையும் அமைதிப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். அதற்கே குறி வைக்கப் போகிறோம்" என்று ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.


இதனால் இன்றைய போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று நம்பலாம். இரு அணிகளுமே சம பலத்துடன் இருப்பதால் மைதானத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சிலர் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளனர்.


இந்தியா சமீப ஆண்டுகளாக உலக கோப்பையை கைப்பற்றவில்லை. இறுதிப்போட்டி வரை சென்று கூட கோப்பையை கைநழுவ விட்டுள்ளது. அதேசமயம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அணி மிகப்பெரிய பலத்துடன் இந்தத் தொடரில் திகழ்கிறது. இந்த அணிதான் பெஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு மிக மிக வலுவாக உள்ளது. இதனால் வெற்றி யாருக்கு என துல்லியமாக கணித்துச் செல்ல முடியாமல் நிபுணர்களே திகைத்துப் போய் உள்ளனர்  இன்றைய போட்டி யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை போட்டி தொடங்கியதும் நாமே பார்த்து மகிழலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்