ICC Champions Trophy 2025: பாகிஸ்தானுக்கு போய் விளையாட வாய்ப்பில்லை.. இந்திய அணி முடிவு!

Jul 11, 2024,06:54 PM IST

மும்பை: 2025ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பாகிஸ்தானில் போட்டிகளில் கலந்த கொள்வதில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்தியா தொடர்புடைய போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறும் அது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கோரிக்கை வைக்கவுள்ளது.


2017ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடரை மீண்டும் தொடர முடிவு செய்துள்ளது ஐசிசி. 2025ம் பிப்ரவரி - மார்ச் மாதம் இந்தப் போட்டித் தொடரை பாகிஸ்தானில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானில் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதில்லை என்பதால் அங்கு நடைபெறும் போட்டிகளை துபாய் அல்லது இலங்கைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.




இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்து கடிதம் எழுத இ்நதிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் இந்த முடிவு காரணமாக, போட்டியை பாகிஸ்தான் மற்றும் வேறு ஒரு நாட்டில் நடத்த ஐசிசியும் முடிவெடுக்கும் என்று தெரிகிறது.


கடந்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கால அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் வாரியத்தில் சமர்ப்பித்தது. அதில் இந்தியா தொடர்பான போட்டிகளை லாகூரில் நடத்த திட்டமிட்டிருப்பாதக அது தெரிவித்திருந்தது.  அதில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மார்ச் 1ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது. இருப்பினும் பாகிஸ்தானில் விளையாடுவதில்லை என்ற முடிவில் பிசிசிஐ உறுதியாக உள்ளது.


தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுறுவ விட்டு இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபடுவதால் பாகிஸ்தானில் நடைபெறும் எந்த வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்பதில்லை. குறிப்பாக கிரிக்கெட் விளையாடுவதில்லை. நீண்ட காலமாக இந்த முடிவை இந்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதனால் பாகிஸ்தான் ஏதாவது சர்வதேச கிரிக்கெட் தொடரை நடத்தினால் இந்தியாவுக்கு வசதிாக நியூட்ரல் மைதானங்களில்தான் இந்தியா தொடர்புடைய போட்டிகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல பாகிஸ்தானும் இந்தியாவுக்கு வந்து விளையாடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்