100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சூப்பர் வெற்றி.. இங்கிலாந்து பரிதாப தோல்வி!

Oct 29, 2023,09:58 PM IST

லக்னோ : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா சூப்பரான வெற்றியை பெற்றுள்ளது. 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா. 


இந்தியா - இங்கிலாந்து  இடையிலான உலகக் கோப்பை போட்டி லக்னோவில் உள்ள ஏகனா ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. முதலில் பேட் செய்த இந்தியா பெரும் தடுமாற்றத்துடன் விளையாடியது. இங்கிலாந்து வீரர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினர். இதனால் பெரியஸ்கோரை எட்ட முடியாமல் 229 ரன்களை மட்டுமே இந்தியாவால் எடுக்க முடிந்தது. கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி அணியின் மானத்தைக் காப்பாற்றினார். சூரிய குமார் யாதவ் கடைசி நேரத்தில் கை கொடுத்ததால் இந்தியா கெளரவமான ஸ்கோரை எட்ட முடிந்தது.




அதைத் தொடர்ந்து இங்கிலாந்து தனது சேசிங்கைத் தொடங்கியது. ஆனால் இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை இந்திய பந்து வீச்சாளர்கள் முறியடித்து விட்டனர்.   குறிப்பாக முகம்மது ஷமியும், பும்ராவும் அசத்தினர். பேர்ஸ்டோவை ஷமி வெளியேற்ற, அடுத்து அதிரடி காட்டினார் பும்ரா. 2 பந்துகளில் டேவிட் மலன், ஜோ ரூட் ஆகிய இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றி இங்கிலாந்தை நிலை குலைய வைத்து விட்டார். தொடர்ந்து பென் ஸ்டோக்ஸும் டக் அவுட் ஆகி ஷமி பந்தில் வெளியே இங்கிலாந்து முற்றிலும் சீர்குலைந்து விட்டது.


லியாம் லிவிங்டன் சற்று நிதானித்து ஆடி அணியின் ஸ்கோர்  100ஐத் தொட உதவினார். ஆனாலும் இந்தியாவின் பந்து வீச்சு தொடர்ந்து சிறப்பாக தொடரவே, இங்கிலாந்தால் மீண்டு வர முடியவில்லை.  கடைசியில் வெறும் 129 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து. இதன் மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.  இது இந்தியாவுக்கு தொடர்ச்சியான 6வது வெற்றியாக அமைந்துள்ளது.






2023 ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 48 போட்டிகள் கொண்ட இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 28 போட்டிகள் நிறைவடைந்து உள்ளன. இன்று நடந்தது 29 வது போட்டியாகும்.


100வது போட்டியில் ரோஹித் அபாரம்


இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்ற பிறகு ரோகித் சர்மா பங்கேற்கும் 100 வது போட்டி இதுவாகும். இதனால் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. கூடவே வெற்றியும் கை கூடியுள்ளது.  இந்தப் போட்டியில் இந்தியாவின் ஸ்கோர் கெளரமான நிலையை எட்ட ரோஹித் சரம்மாவின் சிறப்பா பேட்டிங்கும் முக்கியக் காரணம்.


நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா இதுவரை  ஒருமுறை கூட தோற்கவில்லை. மேலும் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்து விட்டது. இந்தியாவுக்கு இன்னும் 3 போட்டிகள் உள்ளன. அதிலும் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.


மறுபக்கம் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து மிகப் பரிதாபமாக 10வது இடத்தில் அதாவது கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி அரை இறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை முற்றிலும் இழந்து விட்டது. இதுவரை 6 போட்டிகளில் ஆடிய இங்கிலாந்து  ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற 5 போட்டிகளிலும் தோல்வியையே தழுவியது. இதனால் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அது தனது கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பை நழுவ விட்டு விட்டது.  மிக மோசமான முறையில் இங்கிலாந்து இந்தத் தொடரில் ஆடியது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்