நான் பிடிச்சது "ஆயுர்வேத பீடி".. ஸ்மோக்கிங்கை என்கரேஜ் பண்ண மாட்டேன்.. மகேஷ் பாபு அதிரடி!

Jan 17, 2024,06:36 PM IST

ஹைதராபாத்: குண்டூர் காரம் படத்தில் நான் பிடித்தது ஆயுர்வேத பீடி. வழக்கமான புகையிலை பீடி அல்ல.. புகை பிடிக்கும் பழக்கத்தை நான் ஆதரிக்க மாட்டேன்.. நானும் புகை பிடிக்க மாட்டேன் என்று நடிகர் மகேஷ் பாபு கூறியுள்ளார்.


சினிமாவில் சூப்பர் நடிகர்கள் புகை பிடிப்பது போல, மது அருந்துவது போல நடிக்கும்போது அது சர்ச்சையைக் கிளப்பி விடுகிறது. காரணம், அவர்களைப் பின்பற்றும்  ரசிகர்களும் அதைப் பின்பற்றுவார்கள் என்பதால் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இதுபோன்ற கெட்ட பழக்கங்களை தவிர்க்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைக்கிறார்கள்.


தமிழ்நாட்டில் ரஜினிகாந்த், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு இதுபோன்ற கோரிக்கை அடிக்கடி வரும். அவர்களது படங்களில் இதுபோன்ற காட்சிகள் வந்தால் சர்ச்சையாகி விடுவதும் வழக்கம். இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கும் இதுபோல ஒரு சர்ச்சை வந்துள்ளது.




மகேஷ்பாபு நடிப்பில் குண்டூர் காரம் என்ற படம் சங்கராந்திக்கு வந்து பெரும் ஹிட்டாகியுள்ளது. இப்படத்தில் அவர் பீடி பிடிப்பது போன்ற காட்சிகள் வருகின்றன. இது விவாதப் பொருளாகியுள்ளது. இந்த நிலையில் அதுகுறித்து மகேஷ் பாபு விளக்கியுள்ளார்.


வழக்கமாக இதுபோன்ற காட்சிகளில் மகேஷ்பாபு நடிக்க மாட்டார் என்பதால் குண்டூர் காரம் புகை பிடிக்கும் காட்சி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மகேஷ்பாபு கூறுகையில்,  இந்தப் படத்தில் நான் பிடித்தது நிஜமான பீடியே அல்ல. அது ஆயுர்வேத பீடி. கிராம்பு இலைகளால் உருவாக்கப்பட்டது அது. தனிப்பட்ட முறையில் எனது உடல் நலன் குறித்து எனக்கு அக்கறை உண்டு. அதேபோலத்தான் மற்றவர்களும் உடன் நலனுடன் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவேன்.  எப்போதும் நான் புகை பிடிக்கவும் மாட்டேன், அந்தப் பழக்கத்தை ஆதரிக்கவும் மாட்டேன் என்று கூறியுள்ளார் மகேஷ்பாபு.


மகேஷ்பாபுவின் இந்தப் பேச்சு தெலுங்குத் திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதை விட முக்கியமாக அவரது ரசிகர்கள் இதை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.  சூப்பர் ஸ்டார்னா சும்மாவா.. பாராட்டுகள் மகேஷ்பாபு காரு!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்