சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்லம் ஃபெஞ்சால் புயலாக நேற்று உருவாகியது. இந்த புயல் நாளை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று இருந்து பல இடங்களில் புயல் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சாலைகள், வீடுகளில் எல்லாம் மழை நீர் கடல் போல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் செய்வது அறியாமல் திகைத்துள்ளனர்.
இந்நிலையில்,சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு இருந்தபடியே மழை முன்னேற்பாடுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து தேவையான உத்தரவுகளை பிறப்பித்தார். மேலும் மழைநீர் அகற்றும் பணிகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார். மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட புயல் பாதிப்புக்குள்ளான மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இன்று இரவு பலத்த மழை பெய்யும் என்பதால் போதுமான முன்னேற்பாடுகளை செய்யும் படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன்.
எந்த மாவட்டத்தில் இருந்தும் ஆபத்தான செய்தி வரவில்லை நிலைமை கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு இது குறித்து ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம்.
நேற்று இரவு முதல் தொடர்ந்து கடுமையான மழை பெய்து வருகிறது. இன்று இரவு ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களை தொடர்பு கொண்டு கள நிலவரங்களை கேட்டறிந்தோம். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.இன்று இரவு அதிகனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}