விறுவிறுப்படையும் அமெரிக்க தேர்தல் பிரச்சாரம்.. கமலா ஹாரீஸ் போட்ட அந்த சென்டிமென்ட் போஸ்ட்!

Aug 18, 2024,03:33 PM IST

சிகாகோ : அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சார களம் விறுவிறுப்படைந்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரீஸ் குறித்து முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சி வேட்பாளருமான டிரம்ப் பலவிதமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த சமயத்தில் கமலா ஹாரீஸ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் போட்டுள்ள பதிவு அமெரிக்கர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


தாய் மற்றும் தங்கையுடன் இருக்கும் தன்னுடைய சிறு வயது போட்டோவை பகிர்ந்துள்ள கமலா ஹாரீஸ், நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள். என்னுடைய அம்மா சொந்தமாக வீடு வாங்குவதற்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணத்தை சேமித்து வைத்தார். நான் டீன் ஏஜில் இருக்கும் போது எங்களின் வீட்டை அவர் வாங்கினார். அதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நான் கல்லூரியில் படிக்கும் போது மெக்டெனால்டில், பணம் சம்பாதிப்பதற்காக பகுதி நேரமாக வேலை பார்த்தேன். அதனால் வாழ்வதற்காக அமெரிக்காவில் செலவிடப்படும் தொகை எவ்வளவு அதிகரித்துள்ளது என எனக்கு தெரியும்.




விலைவாசி உயர்வால் வாழ்வதற்கு அமெரிக்கர்கள் எவ்வளவு போராட்டங்களை சிரமங்களை சந்தித்து வருகிறார்கள் என்பது எனக்கு தெரியும். நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் நாட்டின் பொருளாதார பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் தந்து, விலைவாசியை குறைப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார். 


கமலா ஹாரிஸ் தன்னுடைய சிறு வயது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து இப்படி ஒரு போஸ்ட் போட்டுள்ளது அமெரிக்க மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  இந்த ஒரே போஸ்டால் கமலா ஹாரிசின் செல்வாக்கு அதிகரிக்க துவங்கி உள்ளது. மறுபக்கம், கமலா ஹாரிஸை  தரம் தாழ்ந்து டிரம்ப் விமர்சித்து வருவது அவருக்கு பின்னடைவையும் ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்