இந்த நாட்டுக்கே நான்தான் பாதுகாப்பு.. எனக்கு ஏன் பாதுகாப்பு.. நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்

Feb 15, 2025,05:51 PM IST

கோவை: என் சொந்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. இந்த நாட்டுக்கே நான்தான் பாதுகாப்பு. எனக்கு ஏன் பாதுகாப்பு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


மத்திய உள்துறை அமைச்சகம் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்க்கு பாதுகாப்பு வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இதில் இரண்டு அல்லது மூன்று துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என மொத்தம் எட்டு முதல் 11 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இரண்டு கான்வே வாகனம் விஜய்யின் வாகனத்திற்கு முன்னும் பின்னும் பயன்படுத்தப்படும்.  சுழற்சி முறையில் 24 மணி நேரமும் விஜயின் வீடு, மற்றும் கட்சி அலுவலகம் அவர் செல்லும் இடம் என  கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்க இருக்கின்றனர்.


விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. இந்த ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு பின்னால் அரசியல்  இருப்பதாக பல்வேறு கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசுகையில்,  தம்பி விஜய் வெளியில் வந்தால் அவருடன் அதிகமானோர் புகைப்படம் எடுக்க வருவார்கள். விஜய் போன்ற புகழ்பெற்ற நடிகருக்கு அது  சிரமம் தான். அதனால் விஜய்க்கு தேவைப்பட்டிருக்கும், கேட்டு வாங்கியிருப்பார். இதனை பெரிதுபடுத்த தேவையில்லை. 




விஜய்க்கு பாதுகாப்பு கொடுத்தால், அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்து விடுவாரா என்ன?... எனக்கு என் சொந்த நாட்டில் பாதுகாப்பு தேவையில்லை. நான்தான் நாட்டிற்கு பாதுகாப்பு.


ஓட்டு பிச்சை எடுக்க நீங்கள் பேசுகிறீர்களா? நான் பேசுகிறேனா? நான் மக்களுக்காகவே நிற்கிறேன். ஆனால் நீங்கள் தேர்தலை வாக்கு விற்கும் சந்தையாக மாற்றிவிட்டீர்கள். இதன்பின் கைகூலி, ஓட்டுப்பிச்சை என்று சொல்கிறார்கள். அண்ணாமலையின் பேச்சு அநாகரீகமானது. 


குற்றச்செயல்கள் நடந்தால், அதற்கான காரணத்தை ஆராய வேண்டும். நாங்கள் ஓட்டுப் பிச்சை கேட்கிறோம் என்றால், நீங்கள் என்ன கேட்கிறீர்கள். தானம் செய்யுங்கள் காணிக்கை கேட்கிறீர்களா?  மயிலாடுதுறை இரட்டை கொலைக்கு முன் விரோதமே காரணம் என போலீசார் கூறுவது வேதனையளிக்கிறது. எப்படியாவது இந்த  அரசை பாதுகாக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்று பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. வவ்வாலிலிருந்து மனிதர்களுக்கு பரவுமாம்!

news

2000 கோடி அல்ல.. 10000 கோடியே கொடுத்தாலும் சரி.. கையெழுத்துப் போட மாட்டோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரதமர் நரேந்திர மோடியின்.. முதன்மைச் செயலாளரானார்.. சக்திகாந்த தாஸ்.. ஓய்வுக்குப் பின் புதுப் பதவி!

news

தான் யார்.. எதற்காக வந்தோம் என்பதே கமல்ஹாசனுக்குப் புரியலையே.. தவெகவின் அதிரடி தாக்கு!

news

பிப்., 26ல் தவெகவின் ஆண்டு விழா.. 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி..!

news

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா vs பாகிஸ்தான்.. நாளைக்கு ஜெயிக்காம விட்ரக் கூடாதுடா பரமா!

news

அனல் பறக்கும் பேச்சாளர்.. அதிரடி டிபேட்டர்.. நாம் தமிழர் கட்சியின் அடையாளம்.. யார் இந்த காளியம்மாள்?

news

தங்கச்சி காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகிக்கலாம்.. ரொம்ப நன்றி என்று சொல்வோம்.. சீமான்

news

சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கா?.. பரபரக்கும் இன்விடேஷன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்