"இயக்குநர் மகேந்திரனை மணந்தது தப்புதான்.. தண்டனை அனுபவிச்சுட்டேன்".. உருகிய பிரேமி!

Nov 29, 2023,05:48 PM IST

சென்னை: நான் இயக்குநர் மகேந்திரனை காதலித்தேன்.. இருவருக்கும் பிடித்திருந்தது.. திருமணம் செய்து கொண்டோம்.. ஆனால் அவருக்கு முதல் மனைவி இருப்பது தெரிந்தும் நான் அவரை மணந்தது தவறுதான்.. அதற்கான தண்டனையையும் நான் அனுபவிச்சுட்டேன் என்று கூறியுள்ளார் நடிகை பிரேமி.


நடிகை பிரேமியைத் தெரியாத 80ஸ் கிட்ஸ் இருக்க முடியாது. 80களில் வெளியான பல சூப்பர் ஹிட் படங்களில் பிரேமியையும் பார்க்கலாம்.. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் ஜானி படத்தில் ஸ்ரீதேவியின் தோழியாக கூடவே இருப்பாரே.. அவர்தான் பிரேமி.




குணசித்திர நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரேமி. நடிகை என்ற எந்த பந்தாவும், அடையாளமும் இல்லாமல் மிக மிக சாதாரண பெண்ணாகவே எளிமையாக இருந்தவர். தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம், பெங்காலி என பல மொழிகளில் 1000த்திற்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் நாடகங்களில்  நடித்துள்ளாராம். 1964ல் நடிக்க வந்த அவர் தமிழ் சீரியல்களிலும் நடித்துள்ளார்.


இத்தனை காலமாக முகம் தெரியாத ஒருவராக வலம் வந்த பிரேமி முதல் முறையாக பெட்டர் டுடே என்ற யூடியூப் சானலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பலரையும் ஆச்சரியப்படுத்தும் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். இதுதான் அவர் கொடுத்துள்ள முதல் பேட்டியாம்.. பேட்டியைப் பார்க்கும்போது பிரேமி மீதான மதிப்பும், மரியாதையும், அன்பும் அதிகரிக்கிறது. அத்தனை எதார்த்தமாக பேசியுள்ளார்.


பிரேமியின் பேட்டியிலிருந்து சில துளிகள்..


சினிமாத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிறது. இப்பதான் நான் முதல்முறையாக பேட்டி கொடுக்கிறேன். ஒரு  நடிகைன்ற மாதிரி காட்டிக்க மாட்டேன். பேட்டி கொடுப்பதில் விருப்பம் இல்லாததால் பேட்டி கொடுக்கல. முதலில் நடிப்பதில் ஆர்வம் இல்ல. குடும்பத்தை காப்பாற்ற இந்த தொழிலுக்கு வந்தேன். இப்ப என் குடும்பம் நல்ல இருக்கு. 


நா படிக்கனும்னு ஆசைப்பட்டேன். அப்பா அம்மாவின் கட்டாயத்துல நடிக்க வந்தேன். அப்பாவும் ஒரு நடிகர்தான். அதனால்தான் அவரோட நடிப்பு எனக்கும் வந்துருச்சு போல. எனக்கு 3 முகம் உண்டு. நடிக்க போயிட்டா ஒரு முகம். குடும்பத்துக்கு வந்தா ஒரு முகம். 3வது ஆன்மீகம் அங்க ஒரு முகம். சினிமாவுல பெரிய ஆளா ஆகனும்னு நினைக்கல. நம்ம இந்த தொழிலை நேசிச்சா நம்மள அந்த தொழில் நேசிக்கும். 


நான் ரொம்ப அமைதியானவள்




என்கூட இருந்தவங்க எங்க இருக்காங்கனு கூட தெரியாது. ஆனா நா இன்னும் கேமிரா எதிரே இன்னும் நடிச்சுகிட்டு தான் இருக்கேன். ஹீரோயினா ஆகணும்னு விருப்பம் இருந்துச்சு. ஆனா நடிக்க வந்ததுக்கு அப்பறம்தான் அது பெரிய விசயம்ன்னு தெரிஞ்சுச்சு. அமைதியான கேரக்டர், அழறதுன்னா அது பிரேமி தான்னு செல்லுவாங்க. 


அமைதியா இருப்பேன். நிறைய புக்ஸ் படிப்பேன். யாருகிட்டயும் பேச மாட்டேன். நான் சதாரண கேரக்டர் பண்ற ஆள். என்னையையும் நிறைய பேருக்கு தெரியும். வேலைக்காரி, பிச்சைக்காரி கேரக்டர்னா பிரேமியை கூப்பிடுனு செல்லுவாங்க.  நானும் சிவாஜி கணேசனும் தூரத்து உறவினர்கள். நான் நிறைய இயக்குநர்கள் படத்தில் நடித்திருந்தாலும் மிகவும் பிடித்தவர் இயக்குநர் ஸ்ரீதர் தான். அதனால் இன்னைக்கும் அவரின் படங்கள் டிவியில் போட்டால் முதல் ஆளாக பார்ப்பேன்.  அவரை எனக்கு பிடிக்கும். அவரு படத்துல நடிக்க போகல. ஏன்னா பயம்.


உதிரிப்பூக்களில் தடம் மாறிய வாழ்க்கை




எம்ஜிஆர் னா ரொம்ப பிடிக்கும். அவரு கூட நடிச்சிருக்கேன்.  எல்லாருக்கும் அம்மா காசு கம்மியா தான் கொடுப்பாங்க. உதிரிப்பூக்கள் வந்து என் வாழ்க்கை தடம் மாறிப் போச்சு. 7 வருடம் சினிமாவில் நடிக்காமல் இருந்த என்னை என்னுடைய தோழியின் கணவரான ஜி.என்.ரங்கராஜன் தான் நடிக்க வேண்டும் என வற்புறுத்தி திரைக்கு  கொண்டு வந்தார். செந்தாமரை சார் தான் மகந்திரன் சாரை அறிமுகம் செய்தார். 


தங்கப் பதக்கம் படத்தோட ஷூட்டிங்கில்தான் இருவரும் பார்த்தோம். ஒருத்தரை ஒருத்தர் பார்தோம். எங்கள் இருவருக்கும் பிடித்திருந்தது. மகேந்திரன் வாழ்க்கையில் அவர் திருமணம் ஆனவர் என தெரிந்தும் நான் குறுக்கிட்டு இருக்கக்கூடாது. அது தப்புதான். செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிச்சிட்டேன். எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். 7 வருடங்களுக்குப் பின் அவர் படங்கள் பண்ணாமல் போன காரணத்தால் 2 குடும்பத்தையும் சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டார். அதனால் மகேந்திரன் என்னை விட்டு பிரிந்து சென்றார். 


மகேந்திரனை பிரிந்தது கஷ்டமாக இருந்தது



அவருடைய பிரிவு எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர் நிரந்தரமா விட்டு பிரிவாருன்னு நினைக்கல. பொருளாதார ரீதியா மிகவும் கஷ்டப்பட்டேன். சிங்கிள் பேரண்டா இருந்து என் மகனை வளர்த்தேன். அப்பளம் போட்டேன். ஏன்னா நா பெரிச எதுவும் படிக்கல. நான் படுற கஷ்டத்தை பார்த்து என்னை எங்க அண்ணனும் அண்ணியும் கூட்டிட்டு பார்த்துகிட்டாங்க.


இடையில் நான் நடிக்காம இருந்தேன். எங்க அண்ணன் தான் நடிக்க போக சொன்னார். அப்படி நான் அறிமுகமான ரீ என்ட்ரி படம் தான் தங்கமான ராசா படம். அப்பறம் தூர்தர்ஷனில் சிரீயலில் நடித்தேன். மெகா சிரீயல்னா அதுதான் என்றார் பிரேமி.

சமீபத்திய செய்திகள்

news

தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!

news

தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவு தினம்.. மதுரையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்!

news

கந்த சஷ்டி விரதம் 2024 : கோவிலுக்குப் போகாமல்.. வீட்டிலேயே எளிமையாக விரதம் இருக்கும் முறை

news

கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

news

கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!

news

மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!

news

35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி

news

வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

news

சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்