35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி

Oct 23, 2024,04:09 PM IST

வயநாடு: கடந்த 35 வருடமாக நான் தேர்தல் களத்தில் எனது தாயாருக்காக, எனது சகோதரருக்காக, எனது கட்சியினருக்காக, கூட்டணிக் கட்சியினருக்காக பிரசாரம் செய்துள்ளேன். ஆனால் இப்போதுதான் முதல் முறையாக எனக்காக பிரச்சாரம் செய்கிறேன் என்று கூறியுள்ளார் பிரியங்கா காந்தி.

நேரு - இந்திரா காந்தி குடும்பத்திலிருந்து புதிய அரசியல் ஸ்டாராக உருவெடுத்துள்ளார் பிரியங்கா காந்தி. கடந்த பல வருடங்களாகவே அவர் தீவிரமாக அரசியல் களத்தில் ஏற்கனவே இருந்து வந்தாலும் கூட இதுவரை ஒருமுறை கூட தேர்தலில் போடடியிட்டதில்லை. மாறாக தனது தாயாருக்காகவும், சகோதரர் ராகுல் காந்திக்காகவும், கட்சியினருக்காகவும்தான் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்தார். 

இப்போது காலத்தின் கட்டாயம் என்று சொல்வது போல அவரை தேர்தல் களத்தில் இறக்கி விட்டுள்ளது காங்கிரஸ். அதுவும் தென் மாநிலமான கேரளாவில் களம் காண்கிறார் பிரியங்கா காந்தி. தனது முதல் தேர்தலிலேயே அவர் தென் மாநிலத்தில் குதிப்பது கவனம் ஈர்ப்பதாக உள்ளது. தெற்கிலிருந்தே இனி வரும் அரசியல் வரலாறுகள் எழுதப்படும் என்பதை சொல்லாமல் சொல்கிறது பிரியங்காவின் முதல் தேர்தல் போட்டி.



தனது சகோதரர் ராகுல் காந்தி 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட வயநாடு தொகுதியில்தான் போட்டியிடுகிறார் பிரியங்கா காந்தி. இதன் மூலம், தென் மாநிலங்களில் போட்டியிடும் 3வது காந்தி குடும்பத்து தலைவர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. அவரது தாயார் சோனியா காந்தி முன்பு கர்நாடக மாநிலம் பெல்லாரியில் போட்டியிட்டு வென்றுள்ளார். அவர் வலிமை வாய்ந்த சுஷ்மா சுவராஜை அப்போது தோற்கடித்திருந்தார். அடுத்து ராகுல் காந்தி 2 முறை வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். இந்த வரிசையில் இப்போது இணைகிறார் பிரியங்கா காந்தி.

இந்த நிலையில் தனது தேர்தல் போட்டி குறித்து வயநாட்டில் காங்கிரஸார் மத்தியில் நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் பேசும்போது சுவாரஸ்யமாக பல தகவல்களை வெளியிட்டார் பிரியங்கா காந்தி. பிரியங்கா காந்தி பேசும்போது, 35 வருஷமா பிரச்சாரம் செய்துள்ளேன். இப்பதான் எனக்காக பிரச்சாரம் செய்கிறேன். இது வித்தியாசமாக இருக்கிறது. இதே தொகுதியில் ராகுல் காந்திக்காக பிரச்சாரம் செய்தேன். இப்போது எனக்கே ஓட்டு கேட்டு வந்துள்ளேன்.

எனக்கு 17 வயது இருக்கும்போது, 1989ம் ஆண்டு எனது தாயாருக்காக முதல் முறை பிரச்சாரம் செய்தேன். இப்போது 35 வருடமாகி விட்டது. எனக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எனது நன்றிகள். வயநாடு மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் செயல்படும் வாய்ப்பை நீங்கள் கொடுத்தால் அது மிகப் பெரிய கவுரமாக இருக்கும்.

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டபோது, நானும் ராகுல் காந்தியும், முண்டக்கை, சூரன்மலா ஆகிய பகுதிகளுக்குச் சென்று பார்த்தோம், மக்களைச் சந்தித்தோம். எனது கண்களால் நான் அந்த கொடும் பாதிப்பை கண்டு அதிர்ந்தேன். பல குழந்தைகள் குடும்பங்களை இழந்த நிலையில் இருந்தது வேதனையை ஏற்படுத்தியது. குழந்தைகளை இழந்த பல தாய்மார்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அந்தப் பகுதி மக்கள் இழந்துள்ளனர் என்றார் அவர்.



ராகுல் காந்தியும் மக்களிடையே பேசினார். அவர் கூறுகையில், உங்களுக்கு அதிகாரப்பூர்வமாக ஒரு எம்.பியும், அதிகாரப்பூர்வமற்ற எம்.பியும் என இரண்டு எம்.பிக்கள் இருக்கப் போகிறார்கள். அந்த இரண்டு எம்.பிக்களும் வயநாடுக்காக லோக்சபாவில் குரல் கொடுப்பார்கள் என்று கூறியபோது கூட்டத்தினர் ஆரவாரமிட்டு அதை வரவேற்றனர்.

வயநாடு  லோக்சபா தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலோடு இணைந்து வயநாட்டுக்கும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!

news

தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவு தினம்.. மதுரையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்!

news

கந்த சஷ்டி விரதம் 2024 : கோவிலுக்குப் போகாமல்.. வீட்டிலேயே எளிமையாக விரதம் இருக்கும் முறை

news

கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

news

கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!

news

மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!

news

35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி

news

வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

news

சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்