ஆட்சியை இழந்த ஜெகன் மோகன் ரெட்டியின்.. வீட்டின் முன்புறம் இடிப்பு.. ஹைதராபாத் மாநகராட்சி அதிரடி!

Jun 15, 2024,05:10 PM IST

ஹைதராபாத்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டின் முன்புறம் கட்டப்பட்டிருந்த கட்டடங்களை இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.


இந்தக் கட்டடங்கள் சட்டத்திற்குப் புறம்பான வகையில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ள  நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டுக்கு ஜேசிபி இயந்திரங்கள் வந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




சம்பவம் நடந்த ஹைதராபாத் நகரமானது, தெலங்கானா மாநிலத் தலைநகராக இருந்தாலும் கூட இது திட்டமிட்ட அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல், சந்திரபாபு நாயுடுவின் தூண்டுதலின் பேரில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இதைச் செய்திருப்பதாக ஜெகன் மோகன் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.


ஹைதராபாத் நகரின் லோட்டஸ் பான்ட் பகுதியில் ஜெகன் மோகன் ரெட்டி வீடு உள்ளது. இந்த வீட்டின் முன்புறம் சில கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை முதல்வரின் பாதுகாப்பு ஊழியர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டவையாகும். அதாவது ஜெகன் மோகன் முதல்வராக இருந்த போது கட்டப்பட்டவை. ஆனால் இவை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன, சட்ட விதிகளுக்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் என்று தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தன.




இருப்பினும் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தவரை இதுகுறித்து ஹைதராபாத் மாநகராட்சி கண்டு கொள்ளாமல் இருந்தது. தற்போது ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை இழந்துள்ள நிலையில் இன்று ஜேசிபி இயந்திரங்களோடு வந்து இந்த கட்டடங்களை அதிகாரிகள் இடித்துத் தள்ளி விட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

சமீபத்திய செய்திகள்

news

நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!

news

CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!

news

A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்