டார்ச்சர் செய்த முன்னாள் காதலன்.. மாஜி காதலி எடுத்த அதிரடி முடிவு.. கடைசியில் 4 பேர் கைது!

Apr 25, 2024,02:21 PM IST

ராய்ச்சூர், கர்நாடகா: மனைவியை தொந்தரவு செய்த  முன்னாள் காதலனை கணவர் கொலை செய்த நிலையில், இந்த கொலை வழக்கில் மனைவி உட்பட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


கர்நாடகா, ராய்ச்சூர் மாவட்டம் பாலகனூர் கிராமத்தை சேர்ந்தவர் காதர் பாட்ஷா. இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வந்தவர் மாருதி. இவருடைய மனைவி புஷ்பாவதிக்கு, காதர் பாட்ஷா செல்போனில் மெசேஜ் அனுப்பி தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாருதி, பாஷாவை  கண்டித்துள்ளார். ஆனால் பாஷா அதனை கேட்காமல் தொடர்ந்து புஷ்பாவதிக்கு மெசேஜ் அனுப்பி வந்திருக்கிறார்.




இதனால் ஆத்திரமடைந்த மாருதி தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் காதர் பாஷாவை கொலை செய்துவிட்டு மஸ்கி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அப்போது மாருதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணைக்குப் பின்னர், மாருதியின் மனைவி புஷ்பாவதி, மது, பாண்டு, கோவிந்தப்பா ஆகிய நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். 


விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.


அதாவது காதர் பாஷாவுக்கும் புஷ்பாவதிக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. அப்போது புஷ்பாவதிக்கு திருமணம் ஆகாததால் இருவரும் அவ்வப்போது சந்தித்து தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையே காதர் பாஷாவுக்கு திருமணம் ஆனது. அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 


மறுபக்கம்  புஷ்பாவதிக்கும் மாருதிக்கும் திருமணம் ஆகி உள்ளது.  தனக்கு திருமணம் ஆகி விட்டதால் இனி நமக்குள் எதுவும் வேண்டாம் என்று காதர் பாஷாவிடம் கூறி விட்டு தொடர்பை துண்டித்துக் கொண்டார். செல்போன் எண்ணையும் மாற்றி விட்டார். இதனால் காதர் பாட்ஷா அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு புஷ்பாவதியின் புதிய செல்போன் எண் குறித்து தெரிய வந்தது. இதையடுடுத்து  காதர் பாஷா அடிக்கடி புஷ்பாவதியின் புதிய செல்போன் நம்பருக்கு மெசேஜ் அனுப்பி தொந்தரவு கொடுத்துள்ளார். 


என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிய புஷ்பாவதி தனது கணவர் மாருதியிடம் கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து மாருதி பலமுறை காதர் பாட்ஷாவை கண்டித்தும் அவர் தொடர்ந்து மெசேஜ் அனுப்பிக்கொண்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாருதி தனது மனைவி மற்றும்  நண்பர்களுடன் சேர்ந்து காதல் பாஷாவை கொலை செய்து விட்டு போலீசில் சரண் அடைந்தது தெரிய வந்தது. இவ்வாறு போலீசார் விசாரணையில் கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்