திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதல் முறையாக, கணவர் ஓய்வு பெற்ற நிலையில் அவரிடமிருந்து தலைமைச் செயலாளர் பொறுப்பை அவரது மனைவி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
இந்தியாவில் கணவன், மனைவி, தந்தை மகன், தலைமைச் செயலாளர்களாக இருந்த வரலாறு இதற்கு முன்பு இருந்திருக்கலாம். ஆனால் முதல் முறையாக கணவர் ஓய்வு பெற்ற நிலையில் அவரது பொறுப்பை மனைவி ஏற்ற அதிசய நிகழ்வு கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநில தலைமைச் செயலாளராக இருந்தவர் வி.வேணு. இவரது மனைவி பெயர் சாரதா முரளீதரன். இருவருமே 90ஸ் பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவர். இருவருக்கும் வயது வித்தியாசம் சில மாதங்கள்தான். வேணு மூத்தவர். வேணு ஆகஸ்ட் 31ம் தேதி தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அடுத்த தலைமைச் செயலாளராக அவரது மனைவி சாரதா முரளீதரன் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு அவர் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து வந்தார்.
இதையடுத்து ஆகஸ்ட் 31ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற வேணுவைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயலாளராக சாரதா பதவியேற்றுக் கொண்டார். இந்த சம்பவம் கேரள மாநில அரசுத்துறை வட்டாரத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும் கூட தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளரிடமிருந்து அவரது மனைவி பொறுப்பை பெற்றுக் கொண்டுள்ளார். புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் பினராயி விஜயன், சாரதா முரளீதரன் மற்றும் வேணு ஆகிய இருவரையும் பாராட்டிப் பேசினார்.
இதுகுறித்து சாரதா முரளீதரன் கூறுகையில், எனக்கு இன்னும் எட்டு மாதங்கள் சர்வீஸ் உள்ளது. அவர் ஓய்வு பெற்று விட்டார். அவர் இல்லாமல், எட்டு மாதங்கள் வேலை பார்க்க வேண்டுமே என்பதே மலைப்பாக உள்ளது. இருவரும் கடந்த 34 வருடமாக இணைந்தே பணியாற்றி வந்தோம் என்று கூறியுள்ளார் சாரதா.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
{{comments.comment}}