தம்பி செய்த அக்கிரமம்.. மனைவி மீது பாய்ந்த கணவர்.. நெஞ்சில் ஏறி அமர்ந்து.. அதிர வைத்த வீடியோ!

Apr 28, 2024,12:20 PM IST

முசாபர்நகர், உத்தரப் பிரதேசம்: தனது மனைவியை தம்பி பாலியல் பலாத்காரம் செய்ததால் ஆத்திரமடைந்த கணவர், தனது தம்பி மீது கோபப்படுவதை விட்டு விட்டு, மனைவியைக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மனைவி மீது ஏறி அமர்ந்து கொண்டு அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளார் அந்த நபர். அதை அந்த நபரின் தம்பியே வீடியோவிலும் பதிவு செய்ததுதான் அதை விட பெரிய அதிர்ச்சியாகும். இந்த கொலைகார வன்மக் கும்பலிடமிருந்து தப்பியுள்ளார் அப்பெண். அவர் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அண்ணன் தம்பி இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தற்போது தேடி வருகின்றனர்.


ஏப்ரல் 2 அந்தப் பெண்ணை, கணவரின் தம்பி பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.  கணவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரது தம்பி இந்த அக்கிரமத்தை செய்துள்ளார். கணவர் வீடு திரும்பியதும் தனக்கு நேர்ந்த கொடுமையை அவரிடம் கூறி அழுதுள்ளார் அப்பெண். வழக்கமாக இது மாதிரி நடந்தால் தவறு செய்தவர்கள் மீதுதானே எல்லோருக்கும் கோபம் வரும்.. ஆனால் அந்த கணவரோ, மனைவியைப் பார்த்து, இதுக்கு மேலேயும் நீ என்னோட மனைவி கிடையாது. என்னோட தம்பி மனைவி நீ என்று கூறி அந்தப் பெண்ணுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.




அடுத்த நாள் கணவரும் அவரது தம்பியும் ஒரு சேர அறைக்குள் நுழைந்துள்ளனர். தனது மனைவியை கணவர் சரமாரியாக அடித்துள்ளார். பின்னர் அவர் மீது ஏறி அமர்ந்து கொண்டு கழுதைத நெரித்துக் கொல்ல முயற்சித்துள்ளார். அதைத் தம்பி தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.


அந்தப் பெண் சிரமப்பட்டு போராடி அவர்களிடமிருந்து விடுபட்டு வெளியேறி தப்பியுள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியதால் போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். பெண் வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் அண்ணன் தம்பி மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தற்போது அவர்களைத் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்