"என் பொண்டாட்டிக்கு ஒரு சேலையும் பிடிக்கலை.. கடையா இது".. ஜவுளிக்கடை ஓனரை கும்மி எடுத்த கணவர்!

Feb 27, 2024,09:53 AM IST

கார்வார்:  கர்நாடகாவில் ஜவுளிக்கடைக்கு மனைவியுடன் போன ஒருவர், அங்கிருந்த எந்த சேலையும் தனது மனைவிக்குப் பிடிக்காததால், என்ன கடை இது என்று கூறி கடை உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நீங்க சேலையே வாங்க வேணாம், கிளம்புங்க என்று கடைக்காரர் கூறியதால் ஆத்திரமடைந்து, தனது நண்பருடன் சேர்ந்து கடைக்காரரை போட்டு சாத்து சாத்து என்று சாத்தி விட்டார்.


மனைவி மனசுக்குப் பிடிச்ச சேலை எடுக்க முடியாத கோபத்தில், சண்டை போட்டு இப்போது தேவையில்லாமல் சிக்கலில் மாட்டியுள்ளார் அந்த பாசக்கார கணவர்!


ஜவுளிக்கடைக்குப் போனால் பொதுவாக இரண்டு விஷயம்தான் அதிகம் அரங்கேறும்.. ஒன்று துணி எடுப்பதற்கு "லேட்" ஆகும்.. இல்லாட்டி "ரேட்" அதிகம் இருக்கும்.. இது மாதிரியான சமயங்களில் கூடப் போகும் கணவர்மார்கள்.. மிகமிக பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.. "ஜென்" நிலைக்குப் போய் விட வேண்டும்.. காரணம்.. இது ரிஸ்க்கியான விஷயம் என்பதால்.. அதுதானே உலக வழக்கமும் கூட!.. ஆனால் தனது மனைவிக்காக சேலை வாங்கப் போன ஒரு கணவர்.. போன இடத்தில் டென்ஷனாகி கோபப்பட்டு தேவையில்லாத சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.




கர்நாடக மாநிலம் சிர்சியைச் சேர்ந்தவர் முகம்மது. இவர் தனது மனைவிக்கு சேலை எடுக்க விரும்பி, சி.பி பஜார் பகுதியில் உள்ள கடைக்குப்  போய் சேலை எடுத்துள்ளார். வீட்டுக்குக் கொண்டு வந்து மனைவியிடம் கொடுத்தபோது, "என்ன டிசைன் இது.. நல்லாவே இல்லை.. ஒரு நல்ல சேலையா பார்த்து எடுக்கத் தெரியலையா" என்று அவர் முகத்தைக் காட்டியுள்ளார்.


"அப்ப நீயே என் கூடவே வா, வந்து உனக்குப் பிடிச்ச சேலையா எடுத்துக்கோ" என்று மனைவியைக் கூட்டிக் கொண்டு அதே கடைக்குப் போனார். கடைக்காரரிடம், சேலையை மாத்தணும் என்று கூற அவரும் சரி போய் பாருங்க என்று அனுமதித்தார். கடைக்குள் போன முகம்மதுவின் மனைவி ரொம்ப நேரமாக சேலைகளைப் பார்த்துள்ளார். ஆனால் எந்த  சேலையும் அவருக்குப் பிடிக்கவில்லை, கிட்டத்தட்ட கடையில் உள்ள அத்தனை சேலைகளையும் கடை ஊழியர் எடுத்துக் காட்டி விட்டார்.. but முகம்மது மனைவிக்கு எதுவுமே திருப்தியா இல்லை.


ஒரு சேலையும் பிடிக்கலை என்று கணவரிடம் கூற அவர் கடுப்பானார்.. ஆனால் கோபத்தை மனைவியிடம் காட்ட முடியாதே.. அதனால் கடைக்காரரிடம் திரும்பினார்.. "என்னங்க கலெக்ஷன் வச்சிருக்கீங்க.. என் மனைவிக்கு ஒரு சேலையும் பிடிக்கலை.. நீங்க சொல்ற காசைத்தானே கொடுத்து வாங்கறோம்.. அப்படீன்னா எங்களுக்குப் பிடிச்ச மாதிரிதானே நீங்க பொருட்களை வச்சிருக்கணும்" என்று கூறி கோபம் காட்டினார்.


அதைக் கேட்ட கடை உரிமையாளர் பலராம், "எங்களிடம் இவ்வளவுதாங்க இருக்கு.. உங்களுக்குப் பிடிக்காட்டி பரவாயில்லை.. பணத்தைத் திருப்பித் தர்றோம், வியாபாரத்தை டிஸ்டர்ப் பண்ணாதீங்க, கிளம்புங்க" என்று கூறியுள்ளார். இதைக் கேட்டதும் முகம்மதுவுக்கு மேலும் கோபம் அதிகமாகி விட்டது.  தனது நண்பர் சர்பிராஸுக்குப் போனைப் போட்டு "கிளம்பி வா.. இங்க ஒரு பஞ்சாயத்து" என்று கூற அவரும், மேலும் சிலரும் அங்கு வர, வந்தவர்களும் கடைக்காரருடன் வாதிட, அந்த இடம் சற்று நேரத்தில் சண்டைக்களமாகி விட்டது.


முகம்மதுவும், அவரது நண்பரும் சேர்ந்து கடைக்காரரை சரமாரியாக தாக்கவே, போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து, அடித்த இருவரையும்  கூட்டிச் சென்றனர். இந்த விவகாரம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்