Jokes: சத்தியமா நான் கிள்ளலை!

Jan 01, 2023,10:48 AM IST
கணவரும் மனைவியும் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தனர். பஸ்சில் செம கூட்டம். அந்த கணவருக்கு அருகில் ஒரு இளம் பெண் நின்றிருந்தார். கணவருக்கு அருகே உரசியபடி நின்ற அந்தப் பெண்ணைப் பார்த்து மனைவிக்கு டென்ஷன் ஆனது. திடீரென அந்தப் பெண் சத்தம் போட்டபடி கணவர் பக்கம் திரும்பி பளார் என ஒரு அறை விட்டார். என்ன தைரியம் இருந்தா இடுப்பைக் கிள்ளுவ என்றும் சத்தம் போட்டபடி வேறு பக்கம் நகர்ந்து சென்றார்.

அதிர்ந்து போன கணவர் வேகமாக மனைவி பக்கம் திரும்பி, சத்தியமா நான் கிள்ளலை என்று வியர்க்க விறுவிறுக்க கூறினார்.

அதைக் கேட்ட மனைவியோ, தெரியும். நான்தான் கிள்ளினேன் என்றாரே பார்க்கலாம்!

--

இந்தா பிடி டிக்கெட்!

மனைவி - இன்னிக்கு நான் ரிலாக்ஸா இருக்கப் போறேன்.. ஸோ, சினிமாவுக்குப் போக 3 டிக்கெட் வாங்கிருக்கேன்.

கணவர் - வாவ்.. சூப்பர்.. நாம ரெண்டு பேர்தானே.. எதுக்கு 3 டிக்கெட்.

மனைவி - அது நமக்கு இல்லை.. உங்களுக்கும், உங்க அம்மா, அப்பாவுக்கும்!



உனக்கு அக்பரைத் தெரியுமா.. உனக்கு திரவுபதியைத் தெரியுமா!

கணவர் - உனக்கு அக்பரைத் தெரியுமா?

மனைவி - ஆமா, அதுக்கென்ன இப்போ?

கணவர்  - அவருக்கு 3 மனைவி.. தெரியும்ல.

மனைவி - உனக்கு திரவுபதியைத் தெரியுமா?

கணவர் - ஹிஹிஹிஹி.. நான் சும்மானாச்சுக்கும் சொன்னேன் டியர்.. இதைப் போயி சீரியஸா எடுத்துக்கிட்டியே நீ!

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்