- மஞ்சுளா தேவி
தூத்துக்குடி: அடக் கொடுமையே.. ஊர் முழுக்க வெள்ளம் வந்து வீடெல்லாம் நனஞ்சு, முங்கிப் போய் கிடந்த அந்தக் கொடுமை கூட இன்னும் மனதிலிருந்து அகலாத நிலையில், இப்போது இந்த அக்கப்போரா.. பார்க்கவே பகீர் என்கிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நான்கு நாட்களாக மூடிக் கிடந்த டாஸ்மாக் மதுக் கடைகளை இன்று திறந்தனர்.. திறந்த வேகத்தில் கூடிய கூட்டம் பார்க்கவே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. (குடி)மகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாட்டில்களை வாங்கி சென்றனர்.
வரலாறு காணாத கனமழையால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது கூட நிவாரணத்தை வழங்க படகு மூலம் மீட்பு படையினர் சென்று வழங்க முடிந்தது. ஆனால் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் நிவாரணத்தை கொடுக்க கூட வழியில்லை. இரண்டு நாள் கழித்து விமானப்படை மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள். இப்படிப்பட்ட கடும் சூழலில் பல்வேறு மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாக உள்ளனர்.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கோரப்பள்ளம் ஏரி உடைந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடி ஊர் முழுவதையும் ஆக்கிரமித்தது. இதனால் பல்வேறு நடுத்தர மக்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமானது. பல்வேறு பொருட்கள் நீருக்கு இறையாக்கின. இன்னும் ஒரு சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் பழைய நிலைமைக்கு மீண்டு வர முடியாமல் மக்கள் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மக்கள் கடந்த நான்கு நாட்களாக வெள்ள பாதிப்பால் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கி தவித்து இருந்தனர். பலர் வேலைக்குச் செல்லாமல் தங்களின் வாழ்வாதாரத்தை நினைத்து கவலை கொண்டு வருகின்றனர். வீடுகளையும், தங்கள் உடைமைகளையும் இழந்து தவித்த மக்கள் கையில் பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.
முழுமையாக சோகம் தீராத நிலையில் டாஸ்மாக் கடைகளை இவ்வளவு அவசரமாக திறக்க வேண்டுமா என்று பலரும் கேட்கிறார்கள். காரணம், கடைகளில் கூடிய கூட்டத்தைப் பார்த்தபோது பகீர் என்று உள்ளது. குறிப்பாக ஏழை பெண்கள் இந்தக் கடைத் திறப்பையும், அதில் கூடிய கூட்டத்தையும் நிச்சயம் ரசிக்கவில்லை.
இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடை திறப்பு தேவையா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தயவு செய்து யோசிக்க வேண்டும். வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கும் நிலையில் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கக் கூட டைம் கொடுக்காமல் கடைகளைத் திறந்து விட்டால், அன்றாடம் பிழைக்கும் அப்பாவி மக்களின் நிலைமை என்ன ஆகும்.. மேலும் சில நாட்கள் கழித்துக் கடைகளைத் திறந்திருக்கலாம் என்பதே பலரது கருத்தாகும்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}