சென்னை துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புடைய போதை பொருள் பறிமுதல்

Sep 27, 2024,12:43 PM IST

சென்னை:   சென்னை துறைமுகத்தில் 110 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு மத்திய புலனாய்வு துறை பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


சமீப காலமாகவே சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து தமிழக முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தும் இது போன்ற போதைப்பொருளின் புழக்கம் குறைந்தபாடில்லை.




அந்த வரிசையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சரக்கு கப்பல் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு பின்னர்  கப்பலை சோதனையிட்டனர்.


அப்போது 250 மூட்டைகளில் 50 கிலோ குவார்ட்ஸ் பவுடரை பதித்து வைத்தது தெரிய வந்தது. அதில் 112 கிலோ சூடோ எப்ரிடின் போதைப்பொருள் பாக்கெட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூபாய் 110 கோடியாகும். மேலும் இதில் சம்பந்தப்பட்ட இருவரை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


சென்னை துறைமுகத்தில் இவ்வளவு அதிக அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதில் தொடர்புடையவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பான விசாரைணயை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!

news

CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!

news

A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்