நீயே சொல்.. என்ன எழுத?.. என் எண்ணமெல்லாம் நீ ஆக்கிரமித்திருக்கும் போது!

Mar 05, 2025,03:28 PM IST
- தேவி 
என்ன எழுத ?
காற்றில் இலைகள் அசைவதைக் கண்டு
காதோரம் ஆடும் 
உன் ஜிமிக்கிகள் 
என்னை துவள செய்கின்றது

என்ன எழுத ?
தனிமையை உணரும் நொடியில் 
உன் புருவ வளைவுகள் 
என்னை சுட்டு தள்ளுகின்றது

என்ன எழுத ?
குயில்களின் கொஞ்சல் போல 
உன் வளையல்களின் கலகல
என் மனசை மயங்கடிக்கிறது

என்ன எழுத?
வார்த்தைகள் இல்லாத ஓவியமாய் 
உன் பார்வையின் தீண்டல் 
என்னை தித்திக்க செய்கின்றது

என்ன எழுத ?
என் வார்த்தைகளின் 
ஓவியமாக இருக்கும் உன்னை 
என் பார்வைகள் பந்தாடுகின்றது

என்ன எழுத?
என் இதயத்துடிப்பின் ஓட்டமாக இருக்கும்
 உன்னை 
கனவிலும் மறக்கத் தவிக்கின்றேன்..

என்ன எழுத ?
என் எண்ணங்களின்
வண்ணமாக நீ 
இருக்கும் போது
எழுத்துக்கள் தடுமாறுகின்னவே!



என்ன எழுத?
வானவில்லின் வண்ணமாக இருக்கும் 
உன் பார்வையில் ஒளிந்து
கொள்கின்றேன்

என்ன எழுத ?
என் தேவையின் தேடலாக இருக்கும் 
உன் ஓரப்பார்வையில்  
கலைந்து  போகின்றேன்

என்ன எழுத ?
தித்திக்கும் தேன் இதழில் 
தவழும் தென்றலாக நினைத்து 
உறைந்து நிற்கின்றேன்

என்ன எழுத ?
என் உயிரின் இசையாக 
நீ இருக்கும் போது
எல்லா ஓசையும்
என் செவிகளை எட்டாமல் போகின்றனவே!

என்ன எழுத ?
என் எண்ணமெல்லாம்
என்னிடத்தில் 
இல்லாமல் உன்னிடத்தில் 
தஞ்சம் புகுந்திருக்கும் போது

என்ன எழுத?
என் உயிரின் உறைவிடமாக இருக்கும் உன்னில் 
உருகும் நாடி துடிப்பாக 
துடிக்கின்றேன்

என்ன எழுத ?
உன் நாடி துடிப்பில்
என் உயிர் தகிக்கும்  பொழுது
தவிப்பிலிருந்து மீள முடியவில்லையே

என்ன எழுத ?
என் எண்ணத்தை எல்லாம் 
உன்னிடத்தில் தஞ்சம் வைத்து 
மஞ்சத்தில் பூத்திருக்கின்றேன்

என்ன எழுத ?
என் உயிரின் ஓடையாக
நீ இருக்கும் போது 
உன்னுள் மிதந்து கொண்டிருக்கின்றேன்

என்ன எழுத ?
உன் உயிரின் 
ஓரெழுத்தாக இருக்க 
என் ஈர எழுத்தை உனதாக்கினேன்
அதன் ஜீவ எழுத்தில்
நான் என்னை இழந்தேன்

என்ன எழுத ?
உன்  காலடி தடத்தை 
கேட்டுக் கேட்டு ரசிக்க
குயிலினை ஊமையாக சொல்கின்றேன்

என்ன எழுத?
உனக்குள் நானும்  
எனக்குள் நீயும்  
எழுத எழுத 
தீராத காவியம் 

என்ன எழுத ?
உன் ஈர பார்வையில் 
வரைந்த ஓவியத்தில் 
மலர்ந்த மொட்டாக
சட்டென 
புத்துயிர் பெறுகின்றேன்

என்ன எழுத ?
உன் ஊமை விழியில்
என் உவமை காதலோடு 
கலகலவென ஊஞ்சலாடுகின்றேன்

என்ன எழுத ?
உன் இதழ்கள்
அசையும்போது
அதன் இசை கேட்டு
மதி மயங்கியதே!

என்ன எழுத ?
என்னில் தவழும் உன் இதழ்கள் 
மௌனத்தில் மலர்ந்ததை கண்டு 
ஏக்கத்தில் கரைகின்றேன்

என்ன எழுத?
என் உதழ் தழுவும்போது
என் இதழ் துவள்வதைப் பார்த்து 
இதயம் தடதடக்கிறது

என்ன எழுத ?
எனக்குள் தீராத 
தித்திக்கும் காவியமாய் இருக்கும் 
உன்னை ஓவியமாக 
நிலவிலும்  வரைகின்றேன்

என்ன எழுத ?
என் நாதமா இருக்கும் உன்னை 
நித்தமும் இசைக்கும் 
வீணையாகின்றேன்

என்ன எழுத ?
என்னில் நிலவாக 
புகுந்து பரவும் உன்னை 
சொர்க்கத்தின் ரூபமாக பார்க்கின்றேன்

என்ன எழுத ?
உன் இதழின்
ஒவ்வொரு பக்கமும்
தேன் நிறைந்து 
வழியும் போது!

என்ன எழுத ?
என்னில் உன்னை 
வீணையாக மீட்டும் போது 
தன்னிலை மறந்து நிற்கிறேன்

என்ன எழுத?
என் புத்தகத்தின் 
ஒவ்வொரு பக்க்ததிலும்
நீ மட்டுமே
வியாபித்து நிற்கும்போது!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்