பட்டுச் சேலை.. கட்டுனா அம்சமாதான் இருக்கும்.. ஆனால் பராமரிப்பு இருக்கே!

Sep 22, 2023,11:17 AM IST

- மீனா


"என்னக்கா புது பட்டு சேலையெல்லாம் கட்டி இருக்கீங்க போல. ஏதாவது பங்க்ஷனுக்கு  போறீங்களா"


"ஆமா பங்ஷனுக்கு தான் போறேன். ஆனா இது புது சேலை கிடையாது.  வாங்கி 10 வருஷம் ஆச்சு. என்னுடைய கல்யாண சேலை இது"




"என்னக்கா சொல்றீங்க பார்த்தா புதுசு மாதிரி இருக்கு வாங்கி 10 வருஷம் ஆச்சு கல்யாணம் சேலைன்னு சொல்றீங்க நம்ப முடியலையே"


"ஏன் அப்படி சொல்ற"


"அதுக்கில்லை.. 4 வருஷத்துக்கு முன்னாடி வாங்குன என்னோட பட்டு சேலையே பழசா போயிடுச்சு. 10 வருஷத்துக்கு முன்னாடி வாங்கன உங்க சேலை இன்னும் புதுசு மாதிரி இருக்கே  அதனாலதான் சொன்னேன்"


"அதெல்லாம் டிரிக்கு மா.. பட்டு சேலையை நல்ல முறையில் பராமரித்தால் எத்தனை வருஷம் ஆனாலும் புதுசு போல தான் இருக்கும். நீ அதை செய்யாம இருந்திருப்ப. அதனால உன்னுடைய பட்டுப் புடவை எல்லாம்  வீணா போயிடுச்சு"




"அட ஆமாக்கா எனக்கு தான் அதை எப்படி பராமரிக்கணும்னு  தெரியல. ஆனா நீங்க எப்படி பட்டு சாரிய பராமரிக்கிறீங்கன்னு சொன்னா  ரொம்ப நல்லா இருக்கும் அக்கா"


"சொல்லிட்டா போச்சு கேட்டுக்கோ"


முதலில் நாம பட்டு சாரியை கட்டிகிட்டு ஃபங்ஷனுக்கு  போயிட்டு வந்த பிறகு அப்படியே  நாலா மடித்து நிழலில் உலர வைத்து விட வேண்டும். சேலையை வேர்வையோடு மடித்து வைக்க கூடாது. அடுத்து பட்டு சாரியை அடிக்கடி துவைக்க கூடாது. டிரைவாஷும் அடிக்கடி பண்ண தேவையில்லை. ஐந்து முறை கட்டின  பிறகு அதை முதலில் டிரை வாஷ்க்கு வெளியே கொடுத்து பண்ணினால் மிகவும் நல்லது. 


பட்டுப்புடவையை சின்னதாக மடித்து வைக்கக் கூடாது. ஏனென்றால் பட்டுப்புடவையை சிறியதாக மடித்து வைக்கும் போது  ஜரிகை எல்லாம் நைந்து வீணாகி போயிடும் . மேலும் மடித்து வைத்திருக்கும் பட்டு சாரியை  இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது எடுத்து ரிவர்சில்  மடித்து வைக்க வேண்டும்.  ஏனென்றால் அந்த மடிப்பு பகுதி அப்படியே அதிக நாள் இருந்தால் அந்த மடிப்பு இருக்கும் இடம் இப்படியே கிழிந்து விடும்.


சாரியை இப்படி மடித்து வைக்கும் போது குஞ்சம் பகுதி வெளியே தெரியும் படியாக வைப்பதும் நல்லது. ஏனென்றால் பட்டு சாரிக்கு இந்த முந்தானை பகுதியில் வருகிற குஞ்சம்  தான் அழகு. அதனால் சாரியை  மடிக்கும் போது இப்படி குஞ்சம் பகுதி வெளியே தெரியும்படி வைப்பதினால்  ஒன்றோடு ஒன்று சிக்காமல்   அப்படியே அழகாக இருக்கும். அதே நேரம்  பட்டு சாரியில் எண்ணெய் கரை ஏதாவது படிந்து விட்டால் அதை உடனே நாம் பயன்படுத்தும் ஏதாவது ஒரு பவுடரை அதில் தேய்த்து டிஸ்யு பேப்பரை வைத்து  ஓரளவுக்கு அழுத்தி  துடைத்தால், அந்த எண்ணெய் கரை போயிரும் . 


அது மட்டும் இல்ல நிறைய பட்டு சேலைகள் இருக்கும்போது அவற்றை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி வைக்காமல், ஒவ்வொரு பட்டு சாரிக்கும் இடையில் ஒரு காட்டன் துணியை விரித்து அதன் மேல் ஒன்றன்பின் ஒன்றாக அடக்கி வைப்பதும் நல்லது. இல்லை என்றால் ஒவ்வொரு பட்டு சாரியையும் ஒரு காட்டன் பையில் வைத்து, அதற்கு மேட்ச் ஆன பிளவுஸையும் சேர்த்து மடித்து அப்படியே செட்டாக வைக்கும் போது சேலையும் பத்திரமாக இருக்கும் . தேவைப்படும் நேரத்தில் நாம் ப்ளவுஸையும் தேடி டென்ஷனாக வேண்டாம். 




பொதுவாக சேலையை வாஷ் பண்ணுவதற்கு அப்படியே தண்ணியில் முழுவதும் முக்காமல் , மேலும் ,கீழும் உள்ள பார்டர் ஒன்றாக சேர்த்து முதலில் உடம்ப பகுதியை அலச வேண்டும். அதன் பிறகு கரைப்பகுதியையும் தனியாக அலசி கொள்ளலாம். இவ்வாறு செய்யும்போது இரண்டும் வெவ்வேறு கலராக இருக்கும் பட்சத்தில் ஒன்றோடு ஒன்று  கலர் சேராமல் இருக்கும். இன்னொரு முக்கியமான விஷயம் நாம எல்லாரும் பீரோவில் நாப்தலின் பால்ஸ் வாசனைக்காக யூஸ் பண்ணி இருப்போம் .ஆனால் இந்த பட்டு சேலையில் அந்த நாப்தலின் பாலை அப்படியே போடாமல்  ஒரு  துணியில் கட்டி வைப்பது நல்லது. இல்லையென்றால் நாப்தலின் பால்ஸ் யூஸ் பண்ணாமல் இருப்பதே சிறந்தது.


"இப்போ புரிஞ்சிச்சா என் செல்லத் தங்கச்சி?"


"ஆமா ஆமா புரிஞ்சிருச்சு.. அதை விடுங்க.. ட்ரைவாஷ் வெளியில கொடுக்காம நான் வீட்டிலேயே பண்ணனும்னா அதுக்கு ஏதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்களேன்"


" இருக்கே சொல்றேன் கேட்டுக்கோ"


பட்டு சாரியை நம் வீட்டிலேயே வாஷ் பண்ணுவதற்கு சிலர் ஷாம்பு யூஸ் பண்ணி பண்றாங்க. ஆனால் அதில் உள்ள கெமிக்கல் அந்த சாரியின் லுக்கை நாளடைவில் கெடுத்துவிடும். அதனால் ஷாம்பூ யூஸ் பண்ணுவதற்கு பதிலாக பூந்திக்கொட்டையை..


"என்னாது பூந்திக் கொட்டையா"


"ஆமா.. குறுக்கே பேசாம முழுசா கேளு"




பூந்திக்கொட்டையை முதல் நாள் இரவு ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதை கைகளால் நன்றாக பிசைந்து அந்த கொட்டையும், தோலையும் நீக்கி விட்டு அந்த தண்ணீரில் சாரியை முக்கி வாஷ் பண்ணிக் கொள்ளலாம். இதில் எந்த ஒரு கெமிக்கலும் இல்லாமல்  இருப்பதினால் இது மிகச் சிறந்த முறையாகும். இப்படி தான் முன்னாடி  பெண்கள் எல்லாரும் பட்டு சாரியை வாஷ் பண்ணினார்களாம். 


"அக்கா.. பூந்திக்கொட்டையை ஊறவைக்க எனக்கு நேரம் இல்லையே. நான் என்ன பண்ண.. வேற ஷார்ட் ரூட் இருக்கா"


"இருக்கே அதுக்கும் ஒரு வழி இருக்கு"


பூந்திக்கொட்டை பொடி என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி தண்ணீரில் போட்டு நன்கு கரைத்தால் நுரை வரும். அந்த தண்ணீரில் நாம் சாரியை வாஷ் பண்ணிக் கொள்ளலாம். ஆனால் இப்படி வாஸ் பண்ணிய சாரியை நிழலில் தான் காய வைக்க வேண்டும். மறந்தும் கூட வெயிலில் காய வைக்க கூடாது. அப்படி காய வைத்தால் அந்த பட்டு சாரியில் சரிகை எல்லாம் வீணாகி  பட்டு சாரியின் கலரும் மங்கி போயிரும். 


"அம்மாடி.. பட்டு சாரி பராமரிப்பதில் இவ்வளவு விஷயம் இருக்குதுன்னு எனக்கு இன்னைக்கு தான்க்கா நீங்க சொல்லி தெரியுது. இது தெரியாம என்னோட பட்டு சேலை எல்லாம் நானே வீணாக்கிட்டேனே. அப்பாடா இனி எனக்கு கவலை இல்லை. வர்ற தீபாவளிக்கு ஒரு பட்டு சேலை இல்ல இரண்டு பட்டு சேலையா பார்த்து எடுத்துற  வேண்டியது தான்"


என்னங்க இப்போ உங்களுக்கும் கிளியர் ஆயிருக்குமே. அப்புறம் என்ன இந்த டிப்ஸ நீங்களும் ஃபாலோ பண்ணி பாருங்க.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்