மழைக்காலத்திலும் முடி கொட்டாமல் பளபளப்பாக ஆரோக்கியமாக இருக்கணுமா.. இதைப் படிங்க!

Oct 30, 2023,02:59 PM IST

- மீனா


"மழை வருது மழை வருது குடை கொண்டு வா..."


எதுக்கு..  வேற எதுக்கு நனையாமல் இருப்பதற்கு தான்.. மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே குடைகளுக்கும் வேலை வந்துவிடும் . மழையில் நனைந்தால் சளி ,இருமல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுவது என்பது நமக்கு எல்லாம் தெரியும். ஆனால் மழை ,குளிர் சீசன் ஆரம்பித்து விட்டால் நம் உடலில் இன்னும் சில மாற்றங்கள் ஏற்படத்தான் செய்கிறது. அதிலும் முக்கியமாக நம்முடைய முடியையும் ,முகத்தையும்  பாதிப்படையை செய்து விடுகிறது.




மழைக்காலமும், குளிர்காலமும் வந்து விட்டாலே பருவ கால  தொற்றுகள் ஏற்படுவதை போல் ஏராளமான  தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் அடுத்தடுத்து வந்துவிடும். குறிப்பாக தலைமுடி பிசுபிசுப்பாக இருக்கும். நமக்கு தொடவே பிடிக்காது. ஏனென்றால் காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் தலையில் அழுக்குகளை சேர்த்து தலைமுடி உதிர்தல் ,பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுத்து விடும். இதனால் முடியின் வேர் கால்கள் பலவீனமடைந்து முடி உதிர்தலும் இந்த  நேரத்தில் அதிகமாக இருக்கும். 


இந்த மாதிரி தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்றால் மற்ற காலங்களை விட இந்த குளிர் காலத்தில் இன்னும் அதிகமாக நாம் முடி பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அவை  என்னவென்று பார்க்கலாம் வாங்க. பொதுவாக முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் முதன்மையானது பொடுகு தொல்லை தான். ஏனென்றால் இந்த குளிர் காலத்தில் ஏற்படக்கூடிய பொடுகு உச்சந்தலையில் அதிகப்படியான அரிப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. மற்ற காலத்தை விட குளிர் காலத்தில் ஒரு வாரத்திற்கு மூன்று முதல் நான்கு நாள் தலைமுடியை அலச வேண்டும். 




இந்த நான்கு  நாளும் ஷாம்பு யூஸ் பண்ண கூடாது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று இரண்டு முறை மட்டுமே ஷாம்பு பயன்படுத்திவிட்டு மற்ற இரண்டு நாட்கள் வெறும் தண்ணீரினால் மட்டும் அலசினால் போதும். அதேபோல் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது தலையை சீப்பு வைத்து சீவி விடும்போது ஏதாவது பொடுகு இருந்தால் கூட அது எல்லாம் குறைய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்ல தலைமுடியின் வறட்சி குறைந்து ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான எண்ணெயை இந்த முறையே உற்பத்தி செய்யும். அதனால் காலை மற்றும் இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன் என்று இரண்டு முறை தலை முடியை சீவுவது  நல்லது.


தலை முடியையும் வேர்க்கால்களையும் மாய்ஸ்ச்சராக வைத்திருப்பதும் அவசியம். உடம்புக்கு நீர் சத்து எவ்வளவு முக்கியமோ அதே அளவு தலைமுடியையும் நீர் சத்துடன்  வைத்திருக்க வேண்டும்.  அதனால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால் குளிர்காலத்தில் அவ்வளவாக தாகம் எடுக்காது. ஆனாலும் தண்ணீர் குடிப்பதை குறைக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. இந்த காலத்தில் தலைமுடிக்கு ஹேர் ஸ்டைல் செய்யும் உபகரணங்களையும் அளவோடு பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் ஹேர் ஸ்ட்ரெய்ட்னர் போன்ற கருவிகளை பயன்படுத்தும் போது தலைமுடியும் வேர்க்கால்களும் அதிகமாக வறட்சி அடையும்.




இது இன்னும் முடியை அதிகமாக சேதப்படுத்திவிடும். குளிர்காலத்தில் தலைமுடியில் அழுக்கு சேராமல் அதை அலசுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் தலைமுடிக்கு  எண்ணெயையும்  அளவோடு பயன்படுத்துவதும் முக்கியம். அதனால் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவை மூன்றையும் டபுள் பாய்லர் முறையில் மிதமாக சூடு படுத்தி, அதே மிதமான சூட்டில் இருக்கும் போது தலைமுடிக்கு  தேய்ப்பதும் நல்லது. இதை வாரத்திற்கு  இரண்டு முறை மட்டும் செய்தால் போதும். 


அதிகப்படியான எண்ணெய் தேய்த்து விட்டால் 1/2 மணி நேரம் அல்லது 1 மணி நேரம் கழித்து உடனே தலைக்கு குளித்து விட வேண்டும். இல்லையென்றால் தலையில் அழுக்கு சேர்வதற்கு இதுவே காரணமாகிவிடும். மேலும் வாரத்திற்கு மூன்று முறை ஹேர்பேக்கும் பயன்படுத்தி தலைமுடிக்கு பலம் சேர்க்கலாம். அதுமட்டுமல்ல குளிர்காலத்தில் தண்ணீர் எல்லாம் அதிக  குளிர்ச்சியாக இருக்கும். அதிக குளிர்ந்த தண்ணீரில் தலைமுடியை அலசாமல் வெதுவெதுப்பான தண்ணீர் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ள வேண்டும். 


இவ்வளவு நாள் இல்லாத அளவிற்கு திடீரென்று குளிர்ச்சியான தண்ணீரில்  தலைமுடியை அலசும் போது இரண்டு மடங்கு முடி உதிர்வதற்கு இதுவே வழி வகுத்து விடும் .  பொதுவாக இந்த குளிர்காலத்தில் தலைமுடி பிரச்சனை வராமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்த்தோம் அதில் முக்கியமானது என்னவென்றால்:




1. தலை முடியை ஒரு நாளைக்கு இரண்டு முறை சீவ வேண்டும்.

2. வாரத்திற்கு நான்கு  நாள் தலைமுடியை அலச வேண்டும்.

3. தலைமுடிக்கு மூன்று வகையான எண்ணெய்களையும் மிதமாக சூடு படுத்தி, அதே மிதமான சூட்டில் தலைக்கு தேய்க்க வேண்டும்.

4. மாதத்தில் ஒரு முறை ஹேர் ஸ்பா செய்ய வேண்டும்.

5. வாரத்திற்கு மூன்று முறை ஹேர் பேக்  பயன்படுத்தலாம். இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணினாலே மழை, குளிர் காலத்தில் வரும் தலையாய பிரச்சனையான முடி உதிர்தல் , முடி பிசுபிசுப்பு தன்மை போன்ற பிரச்சனையை கண்ட்ரோல் பண்ணலாம்.


மேலும் எந்த விதமான ஹேர் பேக்குகள், ஹேர் ஸ்பா பயன்படுத்தலாம் என்றும் மற்றும் எப்படி செய்யலாம் என்பதையும் அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்